மாணவர்கள் பள்ளிக்கு வர இனி ‘தடுப்பூசி’ கட்டாயம் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் உள்ள சட்டிஸ்கர் மாநிலத்தில் இருக்கும் பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி போடாத 12 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என்று அந்த மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பள்ளி மாணவர்கள்
இந்தியா முழுவதும் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகமாகி வந்த காரணத்தால் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு போடப்பட்டு இருந்தது. அதன் காரணமாக நாட்டில் பொருளாதார சிர்கேடுகள் ஏற்பட்டது. இது மட்டும் இல்லாமல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலமாகவே பாடங்களை நடத்தி வந்தனர். மேலும் பொதுத் தேர்வுகளும் சென்ற வருடம் இல்லாமல் அனைத்து வகுப்புகளும் ஆல்பாஸ் செய்து விட்டனர். இந்த நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைந்த காரணத்தால் மீண்டும் நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவித்து உள்ளனர்.
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – மானியம் குறித்த அப்டேட்!
இவ்வாறு நாட்டில் கொரோனா குறைந்து வந்ததன் காரணத்தினால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தினால் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு வர இருப்பதாக அந்தந்த மாநிலங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது சட்டீஸ்கர் மாநிலத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தினால் மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறையும் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் மாநிலத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகளிலும் 12 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து, தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறை இந்த பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று சண்டிகர் அரசு அறிவித்துள்ளது. அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், இவ்வாறு கூறியுள்ளது மாநில அரசு. மேலும் சண்டிகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர்.