TCS, Wipro & Infosys நிறுவனங்களில் வேலைவாய்ப்பு – ஊதிய உயர்வு விளக்கம்!

0
TCS, Wipro & Infosys நிறுவனங்களில் வேலைவாய்ப்பு - ஊதிய உயர்வு விளக்கம்!
TCS, Wipro & Infosys நிறுவனங்களில் வேலைவாய்ப்பு - ஊதிய உயர்வு விளக்கம்!
TCS, Wipro & Infosys நிறுவனங்களில் வேலைவாய்ப்பு – ஊதிய உயர்வு விளக்கம்!

இந்தியாவின் முன்னணி IT நிறுவனமான TCS , விப்ரோ மற்றும் இன்போசிஸ் போன்றவை புதிய வேலை வாய்ப்புகளை அதிகரித்து வரும் நிலையில், ஊழியர்களுக்கான ஊதிய அளவுகளையும் கணிசமாக உயர்த்த இருப்பதாக அறிக்கை தகவல் வெளியாகியுள்ளது.

ஊதிய உயர்வு

கொரோனா தொற்று நோய் பலரது வேலை வாய்ப்புகளுக்கு புதிய சவால்களை விடுத்து வரும் நிலையில் IT தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் தொடர்ச்சியான உயர்வை சந்தித்து வருகிறது. அதிலும் திறமையானவர்களுக்கு அளிக்கப்படும் வேலை வாய்ப்புகளோடு, ஊதியமும் கணிசமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக TCS, விப்ரோ மற்றும் இன்போசிஸ் போன்ற முன்னணி IT நிறுவனங்கள் பணி முன் அனுபவம் உள்ள திறமையானவர்களை மட்டுமே தங்களது நிறுவனத்தில் பணியமர்த்தி வருவது வழக்கமாகும்.

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – செப்.18 தொடக்கம்!

ஆனால் இதற்கு மாறாக இந்தியாவின் முதன்மை நிறுவனங்கள் கூட, புதிய பட்டதாரிகளை பணியமர்த்துவதில் ஈடுபாடு காட்டி வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தேவைகள் மற்றும் IT வணிகங்கள் அதிகரித்து வருவதனால் புதிய பணியமர்த்தலும் உயர்வதாக கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக IT நிறுவனங்களில் ஸ்டேக் இன்ஜினியர்கள், டேட்டா இன்ஜினியர்கள், ப்ரண்டென்ட் இன்ஜினியர்கள், டெவலப்பர் செயல்பாடுகள், டேட்டா சயின்டிஸ்டுகள் மற்றும் பின்தளத்தில் உள்ள இன்ஜினியர்களுக்காக தேவை அதிகளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SBI வங்கியின் ஓய்வூதிய சேவை வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வலைதளம் புதுப்பிப்பு!

அதனால் அதிக ஊதியத்தை அறிவித்து, திறமையானவர்களை தனது குழுவில் சேர்ப்பதற்கு முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன. உதாரணமாக, IT நிறுவனங்களில் முழு ஸ்டேக் இன்ஜினியர்களின் சம்பள உயர்வு தற்போது 70 முதல் 120 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு ஒரு வருடத்திற்கு முன்பு சுமார் 20 முதல் 30%மாக இருக்கும் எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஒரு முன்னணி பொறியாளருக்கு, 60 முதல் 100% வரை சம்பள உயர்வு கொடுக்கப்படலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!