அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டான் மற்றும் செந்துறை பகுதியில் கொரோனா தடுப்பு 4 வகை பணிகளுக்கான ஒப்பந்த ஊழியர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கொரோனா பரவலால் மாநிலம் எங்கும் மருத்துவ பணியாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். கொரோனா பரிசோதனை மேற்கொள்வது, குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று நோய் பாதிப்புகளை கணக்கெடுப்பது, அரசின் வைட்டமின் மாத்திரைகள் வழங்குவது, தடுப்பூசிகள் செலுத்தியவர்கள் மற்றும் செலுத்தாதவர்களை கணக்கெடுப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

HCL நிறுவனத்தில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு – ஜூலை 1 முதல் சம்பள உயர்வு!

இந்த கொரோனா பேரிடரில் மாநில ஒப்பந்தத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர்களை அரசு நியமித்தது. அவர்கள் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்கின்றனர் . தற்போது அரியலூர் மாவட்டத்தில் ஐயம்கொண்டான் மற்றும் செந்துறையில் பகுதியில் கொரோனா தடுப்பு 4 வகை பணிகளுக்கான ஒப்பந்த ஊழியர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்பர் நிலை 2, நுண் கதிரளர்கள் போன்ற பணிகளுக்கு தற்காலிகமாக பணிபுரிய தகுதியும், விருப்பமும் உடையவர்கள் வரும் ஜூலை 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, சாதி சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து அரசு தலைமை மருத்துவ வளாகம், துறையூர் சாலை, பெரம்பலூர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனவும் விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் வரும் ஜூலை 30ம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here