தமிழக ரேஷன் கடைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – 164 காலிப்பணியிடங்கள் | உடனே விண்ணப்பிக்கலாம்!

0
தமிழக ரேஷன் கடைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - 164 காலிப்பணியிடங்கள் | உடனே விண்ணப்பிக்கலாம்!
தமிழக ரேஷன் கடைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - 164 காலிப்பணியிடங்கள் | உடனே விண்ணப்பிக்கலாம்!
தமிழக ரேஷன் கடைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – 164 காலிப்பணியிடங்கள் | உடனே விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 164 காலி பணியிடங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த விவரங்கள் மதுரை மண்டல கூட்டுறவு சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகள்:

தமிழகத்தில் அரசு வேலைக்காக பலர் காத்திருக்கும் நிலையில் ரேஷன் கடைகளில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் 164 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமல் ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இது குறித்த அறிவிப்பை மதுரை மண்டல கூட்டுறவு சங்கம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதில் , மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் ரேஷன் கடைகளில் 164 விற்பனையாளர்கள் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த பணியிடங்களில் விண்ணப்பிக்க https://drbmadurai.net என்ற இணையதளம் மூலமாக நவம்பர் 14ஆம் தேதி மாலை 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்த மாநில அரசு – கனமழை எதிரொலி!

Exams Daily Mobile App Download

மேலும் ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளமான www.drbmadurai.net என்பதில், விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் இந்த பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, வயதுவரம்பு, இடஒதுக்கீடு, விண்ணப்பக்கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் முறை குறித்த விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த இணையதளத்தை பார்வையிட்டு இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த சந்தேகங்களை கேட்டறிய [email protected] என்ற இ-மெயில் மூலமாகவும், உதவிமைய தொலைபேசி எண் 0452 2531286 மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!