தமிழக அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவியில் காலிப்பணியிடங்கள் – செப்.10ல் தேர்வு!

0
தமிழக அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவியில் காலிப்பணியிடங்கள் - செப்.10ல் தேர்வு!
தமிழக அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவியில் காலிப்பணியிடங்கள் - செப்.10ல் தேர்வு!
தமிழக அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவியில் காலிப்பணியிடங்கள் – செப்.10ல் தேர்வு!

தமிழக இந்து அறநிலையத் துறையில் காலியாக இருக்கும் செயல் அலுவலர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புகளை நடத்த இருப்பதாக TNPSC அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 17ம் தேதி வரை வரவேற்கப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 10ம் தேதி தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தற்போது, இந்து அறநிலையத் துறையில் காலியாக இருக்கும் செயல் அலுவலர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புகளை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த வகையில், நடப்பு ஆண்டில் குரூப் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்த இருப்பதாக அறிவித்த TNPSC தற்போது செயல் அலுவலர் பதவிகளுக்கு தேர்வுகளை நடத்த இருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் அறநிலையத் துறையின் செயல் அலுவலர் நிலை-3 பதவியில் சுமார் 42 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக வரும் செப்டம்பர் மாதம் 10ம் தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இப்போது விருப்பமும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜூன் 17ம் தேதி வரை விண்ணப்பங்களை செலுத்தலாம். விண்ணப்பங்களை செலுத்துவதற்கான வயது வரம்பு 25 ஆகும். இருப்பினும் இட ஒதுக்கீடு பிரிவின் கீழ், பொதுப் பிரிவினர் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். அதே போல மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வயது வரம்பில் இருந்து சலுகை அளிக்கப்படுகிறது. இந்த தகுதியுள்ள அனைவரும் BA இந்திய வரலாறு மற்றும் மத நிறுவனங்களில் மேலாண்மை படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

தமிழக தனியார் பள்ளிகளில் RTE இலவச மாணவர் சேர்க்கை – மே 25 கடைசி நாள்!

தவிர, இந்திய கல்வெட்டியல் கல்வி நிறுவனத்தில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியலில் டிப்ளமா படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைமுறைகளை பொருத்தளவு தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் ஆகும். மற்றபடி, பொது பாடங்கள் பிரிவுக்கான தேர்வு காலையிலும், இந்து மதம் மற்றும் சைவம், வைணவம் தொடர்பான பிரிவுக்கு பிற்பகலில் தேர்வுகள் நடத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர சிறைத் துறை உளவியலாளர் பதவியில் ஏற்பட்டுள்ள 4 காலியிடங்களுக்கு ஆகஸ்ட் 6ல் தேர்வு நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கணினி வழி தேர்வாக நடத்தப்பட இருக்கும் நிலையில் ஜூன் 16 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!