தமிழக ரேஷன் கடைகளில் 3,803 காலிப்பணியிடங்கள் – வேலைவாய்ப்பு அறிவிப்பு!

0
தமிழக ரேஷன் கடைகளில் 3,803 காலிப்பணியிடங்கள் - வேலைவாய்ப்பு அறிவிப்பு!
தமிழக ரேஷன் கடைகளில் 3,803 காலிப்பணியிடங்கள் - வேலைவாய்ப்பு அறிவிப்பு!
தமிழக ரேஷன் கடைகளில் 3,803 காலிப்பணியிடங்கள் – வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழக நியாய விலை கடைகளில் காலியாக உள்ள 3,803 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த பணியிடங்களை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் குறிக்கோள், எல்லா குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல் ஆகும். பொது விநியோக திட்டம், அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய போது, நியாய விலை கடைகளில் சேல்ஸ்மேன், பேக்கர்ஸ் பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே நியாய விலை கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.

இந்திய IT நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – இந்த ஆண்டில் 9.9% சம்பள உயர்வு! முழு விவரம் இதோ!

தமிழக சட்டப்பேரவையில் நியாய விலை கடைகளில் காலியாக உள்ள 3331 விற்பனையாளர்கள், 686 கட்டுநர்கள் காலிப் பணியிடங்களுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பினை ரத்து செய்து, 1988ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளை பின்பற்றியும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் பெற்றும் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்று சிறப்பு அறிவிப்பை அப்போது கூறியிருந்தார். இந்நிலையில் தமிழ்நாட்டில் 23,502 முழுநேர நியாயவிலை கடைகளும், 9639 பகுதி நேர நியாய விலை கடைகள் என மொத்தம் 33,141 கடைகள் செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – தேர்தல் ஆணையம் உத்தரவு!

இந்த நியாய விலை கடைகளில் 31.12.2021 தேதியில் 3,176 விற்பனையாளர், 627 கட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுத்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தனியே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!