தமிழக மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு – விரைவில் அறிவிப்பு!

0
தமிழக மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு - விரைவில் அறிவிப்பு!
தமிழக மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு - விரைவில் அறிவிப்பு!
தமிழக மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு – விரைவில் அறிவிப்பு!

தமிழக மின் வாரியத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், ஆட்கள் தேர்வு செய்வது குறித்து புதிதாக அறிவிப்பு வெளியிட மின்வாரியம் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

மின்வாரியம்:

தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் திமுக பெருபான்மை பெற்று முக ஸ்டாலின் முதல்வர் பதவியேற்றார். அதனை தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை மாநிலத்தில் ஏற்படுத்தி வருகிறார். அனைத்து துறைகளிலும் வளர்ச்சிக்கு தேவையான நடவடிகைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மற்ற துறைகளை தொடர்ந்து மின்சார துறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மக்களின் மின் சார்ந்த குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய ‘மின்னகம்’ சேவை மையம் அமைக்கப்ட்டுள்ளது.

நீட் தேர்வு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு? வெளியான முக்கிய தகவல்!

இதில் புகார் அளித்த 2 நாட்களுக்குள் மின்தடை பிரச்சனை நிவர்த்தி செய்யப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் மாதம்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது ஊரடங்கால் மின் கணக்கீடு செய்யப்படவில்லை, அதற்க்கு பதிலாக மின் வாரியம் சில சலுகைகளை அளித்துள்ளது. அதே நேரத்தில் மின் பராமரிப்பு பணிகளும் மாவட்டந்தோறும் நடைபெற்றுள்ளது.

தற்போது தமிழக மின் வாரியத்தில் கள உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. 600 உதவி பொறியாளர், 1,300 கணக்கீட்டாளர், 500 இளநிலை உதவியாளர் கணக்கு பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு, 2020 துவக்கத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. தற்போது உதவி பொறியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு குறித்த அறிவிப்பை மின்வாரியம் வெளியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!