‘பாம்பு பிடி’ மன்னன் வாவா சுரேஷின் தற்போதைய நிலைமை இதுதானா? ஷாக்கிங் தகவல்!

0
'பாம்பு பிடி' மன்னன் வாவா சுரேஷின் தற்போதைய நிலைமை இதுதானா? ஷாக்கிங் தகவல்!
'பாம்பு பிடி' மன்னன் வாவா சுரேஷின் தற்போதைய நிலைமை இதுதானா? ஷாக்கிங் தகவல்!
‘பாம்பு பிடி’ மன்னன் வாவா சுரேஷின் தற்போதைய நிலைமை இதுதானா? ஷாக்கிங் தகவல்!

மக்கள் மத்தியில் பிரபலமான ‘பாம்புபிடி’ மன்னனாக வலம் வந்த வாவா சுரேஷ் சமீபத்தில் நாகப் பாம்பை பிடிக்க முற்படும் போது கடி வாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாவா சுரேஷ்

கேரளாவை சேர்ந்த ‘பாம்புபிடி’ மன்னனான வாவா சுரேஷ் குடியிருப்பு பகுதிகளில் அத்துமீறி நுழையும் பாம்புகளை பிடிப்பதில் வல்லவராக திகழ்ந்து வருபவர். இதுவரை ராஜநாகம் உட்பட 50,000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்திருப்பதால் மக்கள் இவரை ‘பாம்பு மனிதன்’, ‘பாம்பு பிடி மன்னன்’ என்று அன்பாக அழைத்து வருகின்றனர். பாம்புகளை இவர் தைரியமாக பிடிக்கிறார் என்றால் அது கொத்திவிடாதா என்று கேட்டால், இவர் பல நூறு முறைகள் பாம்புகளிடம் இருந்து கடி வாங்கி இருக்கிறார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு – 18 மாத DA நிலுவைத்தொகை! ஒரே நேரத்தில் வருமா?

ஒரு சில சமயங்களில் தீவிரமான விஷக்கடியால் இவர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்திருக்கிறார். இவர் பாம்பு பிடிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி அவ்வப்போது வைரலாவது உண்டு. இதனால் இவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கேரளா மாநிலம் கோட்டயம் அருகே ஒரு நாகப் பாம்பை பிடிக்க முற்பட்ட போது வாவா சுரேஷ், பாம்பிடம் இருந்து கடி பட்டிருக்கிறார்.

இதனால் சுரேஷ் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை அறிந்த மக்கள் அவர் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். இப்போது, பாம்பிடம் இருந்து கடிபட்ட வாவா சுரேஷின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் கோமாவில் இருந்து மீண்டு நினைவு திரும்பி பேசினார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

TNPSC குரூப் 2, 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நேர மாற்றம்! முழு விபரம் இதோ!

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், பாம்பு பிடிப்பதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது. அதன் படி பாம்புகளை பிடித்த பின்னர், அதனை உடனடியாக பைகளில் அடைக்க வேண்டும். அதை விட்டு விட்டு வீரத்தை காட்டுவதற்காகவும், சமூக வலைதளங்களில் லைக்ஸ் பெறுவதற்காகவும் வீர தீர சாகசங்களை செய்ய முற்படும் போது தான் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுகிறது. இந்த பாராட்டுகளுக்காக உயிரைப் பணயம் வைப்பது நல்லதல்ல என்று தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!