குடியரசு தின அணிவகுப்பில் முதலிடம் பெற்ற அலங்கார ஊர்தி – முதல்வர் பெருமிதம்!

0
குடியரசு தின அணிவகுப்பில் முதலிடம் பெற்ற அலங்கார ஊர்தி - முதல்வர் பெருமிதம்!
குடியரசு தின அணிவகுப்பில் முதலிடம் பெற்ற அலங்கார ஊர்தி - முதல்வர் பெருமிதம்!
குடியரசு தின அணிவகுப்பில் முதலிடம் பெற்ற அலங்கார ஊர்தி – முதல்வர் பெருமிதம்!

கடந்த ஜனவரி 26ம் தேதி அன்று கொண்டாடப்பட்ட குடியரசு தின விழா சிறப்பு அணிவகுப்பில் சிறந்த அணிவகுப்பு அலங்கார ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

அலங்கார ஊர்திகள்:

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மத்திய அரசின் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கான அறிவிப்பானது முன்னதாக வெளியிடப்பட்டது. அணிவகுப்பு அலங்கார ஊர்தியில் அந்தந்த மாநில அரசின் சிறப்புகள் மற்றும் சாதனைகள் மற்றும் மாநிலத்தின் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநில அரசின் அலங்கார ஊர்தி மாதிரிகளையும் மத்திய அரசின் குழு சோதித்து அவற்றை இறுதி செய்தது.

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க மீண்டும் அவகாசம் – அமைச்சர் அறிவிப்பு!

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில், நாட்டின் 74 வது குடியரசு தின விழா டெல்லியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. நடப்பு ஆண்டு குடியரசு தின விழா அலங்கார ஊர்தி அணிவகுப்பில் மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா,உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், டாமன் – டையூ, குஜராத், ஹரியானா, மேற்கு வங்கம், ஜம்மு – காஷ்மீர், லடாக், தாத்ரா நகர் ஹவேலி, அசாம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா போன்ற 17 மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் 6 துறைகளை சேர்ந்த வாகனங்களும் தேர்வு செய்யப்பட்டது.

மத்திய அரசு MyGov தளம் மூலம் சிறந்த அணிவகுப்பிற்கான வாக்கெடுப்பை நடத்தியது. அதில், உத்தரகாண்ட் மாநிலத்தின் குடியரசு தின அணிவகுப்பு தான் சிறந்த அணிவகுப்பிற்கான முதலிடத்தை பெற்றுள்ளது. உத்தரகாண்ட் அலங்கார ஊர்தியில் தேவதாரு மரங்கள், கார்பெட் தேசியப் பூங்கா மற்றும் புகழ்பெற்ற ஐபன் கலை இவற்றை தவிர மாநிலத்தின் தனிச்சிறப்பு மிக்க விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் நடுவில் உள்ள ஜாகேஷ்வர் கோயிலும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது குறித்து மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அவர்கள் பெருமிதம் அடைந்துள்ளார். மேலும், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேச மாநில அணிவகுப்புகள் முறையே 2 மற்றும் 3ம் இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!