ஜூலை 6 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
ஜூலை 6 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
ஜூலை 6 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
ஜூலை 6 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா முழு ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூலை 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வார நாட்களிலும் கடைகள் இயக்கத்திற்கு கூடுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்

கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களாக மாநிலங்கள் தோறும் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நாடு முழுவதும் நோய் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு வழங்கும் கல்வி ஊக்கத்தொகை – நாளை கடைசி நாள்!

அதன் படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவானது ஜூலை 6 ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பொது முடக்க காலத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வாரத்தின் ஆறு நாட்களும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும் முசோரி மற்றும் நைனிடால் ஆகிய இரண்டு பிரபலமான சுற்றுலாத் தலங்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

TN Job “FB  Group” Join Now

தவிர ஜிம்கள் மற்றும் பயிற்சி மையங்கள் 50 சதவீத பொதுமக்கள் அனுமதியுடன் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், மால்கள் மற்றும் சினிமா அரங்குகள் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்படும். குறிப்பாக ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தொலைதூரக் கல்விக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஹோட்டல், ரெஸ்டாரன்ட்கள் மற்றும் சாலையோர உணவகங்கள் 50 சதவீத திறனுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!