UPSC 14 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விபரம் இதோ!

0
UPSC 14 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விபரம் இதோ!
UPSC 14 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விபரம் இதோ!
UPSC 14 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விபரம் இதோ!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் UPSC யின் கீழ் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

UPSC காலிப்பணியிடங்கள்:

நாடு முழுவதும் கொரோனா பேரிடரில் இருந்து மக்கள் மீண்டும் வரும் நிலையில் வேலை வாய்ப்பு என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றாக உள்ளது. அதனால் மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை நடத்தவும் தேர்வாணையம் திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் ஏஎஸ், ஐபிஎஸ் உள்பட 24 வகையான இந்திய குடிமையியல் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை ஆண்டுதோறும் UPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது.

POST OFFICEன் அதிக வருமானத்தை தரும் RD திட்டம் – ரூ.100 முதலீடு செய்து கணக்கு தொடங்கலாம்!

அதன்படி நடப்பு ஆண்டில் UPSC யின் கீழ் நிர்வாக அதிகாரி, உதவி வேலைவாய்ப்பு அதிகாரி, துணை மண்டல வேலைவாய்ப்பு அதிகாரி மற்றும் உதவி பேராசிரியர் உள்ளிட்ட 14 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மூத்த நிர்வாக அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பிப்.6ம் தேதி மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு உத்தரவு!

மேலும் மண்டல வேலைவாய்ப்பு அலுவலர் பணியிடத்திற்கு 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். பின்னர் நேர்காணலின் அடிப்படையில் இறுதித் தேர்வு நடைபெறும். தகுதியும், விண்ணப்பமும் உள்ளார்கள் upsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக பிப்ரவரி 10 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!