UPSC இந்த ஆண்டுக்கான NDA NA தேர்வு அறிவிப்பு வெளியீடு – 400 காலிப்பணியிடங்கள்..!

0
UPSC இந்த ஆண்டுக்கான NDA NA தேர்வு அறிவிப்பு வெளியீடு - 400 காலிப்பணியிடங்கள்..!
UPSC இந்த ஆண்டுக்கான NDA NA தேர்வு அறிவிப்பு வெளியீடு - 400 காலிப்பணியிடங்கள்..!
UPSC இந்த ஆண்டுக்கான NDA NA தேர்வு அறிவிப்பு வெளியீடு – 400 காலிப்பணியிடங்கள்..!

Union Public Service Commission (UPSC) எனும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தற்போது National Defence Academy II பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று 400 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Union Public Service Commission (UPSC)
பணியின் பெயர் National Defence Academy II
பணியிடங்கள் 400
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

UPSC NDA NA Exam காலிப்பணியிடம்:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தற்போது வெளியிட்ட அறிவிப்பில், National Defence Academy II தேர்வுக்கு மொத்தமாக 400 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

  • National Defence Academy – 370 காலிப்பணியிடங்கள்.
  • Army – 208
  • Navy – 42
  • Air Force – Flying – 92
  • Air Force Ground Duties (Tech) – 18
  • Air Force Ground Duties (Non Tech) – 10
  • Naval Academy (10+2 Cadet Entry Scheme) – 30 காலிப்பணியிடங்கள்.
UPSC NDA NA Exam தகுதி விவரம்:

Army Wing of National Defence Academy பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

Air Force and Naval Wings of National Defence பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Academy Physics, Chemistry , Mathematics பாடப்பிரிவில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

UPSC NDA NA Exam வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 02.01.2004 ம் தேதி முதல் 01.01.2007 ம் தேதி வரையில் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று UPSC தெரிவித்துள்ளது.

UPSC NDA NA Exam ஊதிய தொகை:

இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Level 10 என்ற மத்திய அரசு ஊதிய விதிமுறைகளின் படி, ரூ.56,100/- மாதம் ஊதிய தொகை அளிக்கப்படும். இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்த விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

UPSC NDA NA Exam விண்ணப்ப கட்டணம்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST candidates / female candidates / Wards of JCOs / NCOs / ORs ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இவர்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 100 மட்டும் விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும் என்று UPSC தெரிவித்துள்ளது.

UPSC NDA NA Exam தேர்வு முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Test (900 Marks) மற்றும் SSB Interview / Personality Test (900 Marks) மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று UPSC தெரிவித்துள்ளது.

UPSC NDA NA Exam தேர்வு தேதி:

இந்த மத்திய அரசு பணிக்கு தேவையான தேதி குறித்த முழு விவரங்கள் இதோ,

விண்ணப்பிக்க 18.05.2022 ம் தேதி முதல் 07.06.2022 ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய 14.06.2022 ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான தேர்வு 04.09.2022 ம் தேதி நடைபெறும் என்றும் UPSC தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் இடம் குறித்து அறிவிப்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

UPSC NDA NA Exam விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த திருமணமாகாத இந்தியர்கள் மட்டும் இப்பதிவின் கீழே உள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று, சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்கவும்.

UPSC NDA NA Exam Notification

UPSC NDA NA Exam Application

UPSC  Official Website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!