712 காலிப்பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு – விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்!!

1
712 காலிப்பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு - விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்!!
712 காலிப்பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு - விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்!!
712 காலிப்பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு – விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்!!

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான முதல்நிலை தேர்வு ஜூன் மாதம் 27 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக யு.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 24 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவித்துள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வுகள்:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ.எப்எஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான ேதர்வுகளை நடத்துகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் பதவிகளுக்கான அறிவிப்பு யு.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு ஜூன் மாதம் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.

TN Job “FB  Group” Join Now

2021 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் காலியாக உள்ள 712 பணியிடங்களை நிரப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நேற்று யு.பி.எஸ்.சி. தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான விண்ணப்பங்கள் அனுப்ப மார்ச் 24 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். www.upsconline.nic.in என்ற யு.பி.எஸ்.சி. அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

கட்டடவியல் படிப்புகளுக்கான “நாடா நுழைவு தேர்வு” – மார்ச் 5 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!!

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதியாக எதாவது பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இதுகுறித்து சங்கர் ஐ.ஏ.எஸ். அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறுகையில்,” சிவில் சர்விஸ் தேர்வுகள் மூன்று கட்டங்களாக முதல்நிலை, முதன்மை தேர்வு, நேர்காணல் என நடைபெறுகிறது. இந்த தேர்வு ஜூன் மாதம் 27 ஆம் தேதி தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – ஆசிரியர்கள் கோரிக்கை

காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை பொது அறிவு தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறிவு தேர்வும் நடக்கிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக மெயின் தேர்வுகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வு தமிழகத்தில் சென்னையில் மட்டுமே நடைபெறும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக ேதர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் – சென்னை ஐஐடி முதலிடம்!!

ஒவ்வொரு ஆண்டும் யு.பி.எஸ்.சி 24 வகையான தேர்வுகளை நடத்தும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக 19 வகையான தேர்வுகள் மட்டுமே நடைபெறுகின்றன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் 900 க்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டு 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Download Notification 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!