UPSC CDS 2022: தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Final Result வெளியீடு!

0
UPSC CDS 2022: தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - Final Result வெளியீடு!
UPSC CDS 2022: தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - Final Result வெளியீடு!
UPSC CDS 2022: தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Final Result வெளியீடு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS) தேர்வு I கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில் தற்போது இறுதியான தேர்வு முடிவுகள் (Final Result) வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்

UPSC CDS ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலமாக இந்தியன் மிலிட்டரி அகாடமி, டேராடூனில் 100 காலியிடங்களும், இந்திய கடற்படை அகாடமி, எழிமலையில் 22 இடங்களும், விமானப்படை அகாடமி, ஹைதராபாத்தில் 32 இடங்களும், அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னையில் (ஆண்கள்) 170 இடங்களும், அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னையில் (பெண்கள்) 17 இடங்களும் என மொத்தமாக 341 காலியிடங்கள் நிரப்புவதற்கான UPSC CDS தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் UPSC வெளியிட்டது.

Exams Daily Mobile App Download

இந்திய ராணுவ அகாடமி, அதிகாரிகள் பயிற்சி அகாடமி, இந்திய கடற்படை அகாடமி மற்றும் இந்திய விமானப்படை அகாடமி ஆகியவற்றிற்கான ஆட்சேர்ப்பு UPSC மூலமாக ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. இதையடுத்து ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS-1 2022) ஆட்சேர்ப்புக்கான எழுத்து தேர்வு கடந்த ஏப்ரல் 10ம் தேதி அன்று நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த நிலையில் இதற்கான முடிவுகள் கடந்த கடந்த மே மாதம் 18ம் தேதி அன்று வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதனை தொடர்ந்து இத்தேர்வின் இறுதி முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இறுதி முடிவுகளை பெற விரும்பும் நபர்கள் https://www.upsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலமாகவும் உங்களின் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

COMBINED DEFENCE SERVICES EXAMINATION (I), 2022 –  FINAL RESULT 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!