UPI மூலம் பணம் செலுத்துபவர்களா நீங்கள்? உங்களுக்கான முக்கிய அப்டேட்!!

0
UPI மூலம் பணம் செலுத்துபவர்களா நீங்கள்? உங்களுக்கான முக்கிய அப்டேட்!!
UPI மூலம் பணம் செலுத்துபவர்களா நீங்கள்? உங்களுக்கான முக்கிய அப்டேட்!!
UPI மூலம் பணம் செலுத்துபவர்களா நீங்கள்? உங்களுக்கான முக்கிய அப்டேட்!!

நாட்டில் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு பிறகு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் இது தொடர்பாக கூடுதலான தகவல்களை நிதிச்சேவைகள் துறை வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டம்:

நாட்டில் அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. மேலும் டிஜிட்டல் இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் அதிகரித்து வருகிறது. மேலும் இதில் குறிப்பாக யுபிஐ எனப்படும் பணபரிமாற்ற வசதியின் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் எந்தவித கூடுதல் கட்டணம் செலுத்த முடியும்.

தமிழக இளைஞர்களுக்கு அரசின் சூப்பர் அறிவிப்பு – மாத உதவித்தொகை வழங்கல்! விண்ணப்பம் வரவேற்பு!

Follow our Twitter Page for More Latest News Updates

மேலும் இந்த UPI முறையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கு PhonePe, Paytm, Google Pay, Amazon Pay ஆகிய செயலிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் இது தொடர்பாக நிதிச் சேவைகள் துறை ட்வீட் செய்துள்ளதாவது, நாட்டில் டிஜிட்டல் பேமெண்ட் முறையில் UPI முக்கிய பங்கு வகிப்பதாக அறிவித்துள்ளது. அத்துடன் தற்போது 381 வங்கிகள் இந்த வசதியை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 782 கோடியைத் தாண்டியுள்ளதாகவும், இதன் மூலமாக ரூ.12.82 லட்சம் கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதே போல் கடந்த நவம்பரில் 730.9 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும், இதன் மதிப்பு ரூ.11.90 லட்சம் கோடி இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!