நாட்டில் 1253 ரயில் நிலையங்கள் புதுப்பிப்பு – மத்திய மந்திரி விளக்கம்!

0
நாட்டில் 1253 ரயில் நிலையங்கள் புதுப்பிப்பு - மத்திய மந்திரி விளக்கம்!
நாட்டில் 1253 ரயில் நிலையங்கள் புதுப்பிப்பு - மத்திய மந்திரி விளக்கம்!
நாட்டில் 1253 ரயில் நிலையங்கள் புதுப்பிப்பு – மத்திய மந்திரி விளக்கம்!

இந்தியாவில் கடந்த ஜூலை 18ம் தேதி முதல் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதில் தற்போது ரயில்வே துறையில் கொண்டுவரப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்து மத்திய ரெயில்வே துறைக்கான மந்திரி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

ரயில் நிலையங்கள்

இந்தியாவில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் பொதுவாக ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தற்போது பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை மற்றும் மக்களவை பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ATM ல் பணம் எடுக்க இனி OTP தேவை!

இதனை தொடர்ந்து இதற்கு முன்பாக நடைபெற்ற கூட்டத்தொடரின் போது, நாட்டின் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக மத்திய ரயில்வே துறைக்கான மந்திரி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான மாதிரி, நவீன மற்றும் ஆதர்ஷ் நிலையத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்களை மத்திய ரயில்வே அமைச்சகம் வகுத்துள்ளது.

Exams Daily Mobile App Download

நாடு முழுவதும் 1,253 ரயில் நிலையங்களின் வளர்ச்சியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை 1,215 நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர மீதமுள்ள 38 நிலையங்கள் 2022-23 நிதியாண்டிற்குள் “ஆதர்ஷ் நிலையம்” என்ற திட்டத்தின் கீழ் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்காக ரூ.2,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதே போல் கடந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் ரூ.2,344 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here