வாட்ஸ் அப் (WhatsApp) பயனர்களுக்கு செம அப்டேட் – விரைவில் வெளியீடு!

0
வாட்ஸ் அப் (WhatsApp) பயனர்களுக்கு செம அப்டேட் - விரைவில் வெளியீடு!
வாட்ஸ் அப் (WhatsApp) பயனர்களுக்கு செம அப்டேட் - விரைவில் வெளியீடு!
வாட்ஸ் அப் (WhatsApp) பயனர்களுக்கு செம அப்டேட் – விரைவில் வெளியீடு!

வாட்ஸ்அப் செயலியானது, அதன் வாடிக்கையாளர்களுக்கு ஓர் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. அதன் படி பயனர் ஒருவர், ஒரே எண்ணில் உள்ள வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை ஒரே நேரத்தில் மொபைல், கணிப்பொறி, டேப்லெட் உள்ளிட்ட பல சாதனங்களில் உபயோகிக்க முடியும்.

பல சாதன உபயோகம்:

ஒவ்வொரு சமூக வலைதளங்களும் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்து அதன் மூலம் தனது வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் ஸ்மார்ட் போன் உபயோகிப்பாளர்கள் எந்தவொரு செயலியையும், அதன் ADVANCED முறையை தான் பயன்படுத்த விரும்புவார்கள். அந்த வரிசையில் சிறந்த தகவல் தொடர்பு சாதனமாக விளங்கும் வாட்ஸ் அப், அதன் வாடிக்கையாளர்களுக்கு இப்படிப்பட்ட பல சேவைகளை அளித்து வருகிறது.

18 வயதிற்கு உட்பட்டவர்களை தாக்கும் கொரோனா 3ம் அலை – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

அதன் படி வாட்ஸ் அப் செயலி தற்போது பல சாதனங்களில் உபயோகப்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இருப்பினும், இந்த அம்சம் பீட்டா பயனாளர்களிடம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ் அப்பின் இந்த புதிய சலுகையானது விரைவில் வெளியிடப்படும் என பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுகர்பெர்க் ஒரு சந்திப்பின் போது உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் ஒரு வாட்ஸ் அப் பயனர், ஒரே நேரத்தில் பல சாதனங்கள் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு பெறும் எளிய வழிமுறைகள் – தவறாமல் படிங்க!!

இது அம்சம் தேவையான பாதுகாப்பை பயனர்களுக்கு வழங்குகிறது. விரிவாக கூறின், செய்திகளை அனுப்புநருக்கும் பெறுநருக்கும் இடையில் மட்டுமே அந்த தகவல்கள் இருக்கும் என்பதோடு வாட்ஸ் அப் செயலியால் கூட அதை படிக்க முடியாது. வாட்ஸ்அப் இப்போது பல சாதன ஆதரவை end-to-end குறியாக்கத்துடன் தொடங்க திட்டமிட்டுள்ளது. தவிர வாட்ஸ் அப்பின் புதிய அம்சங்களின்படி racker, wabetainfo, end-to-end encryption உள்ளிட்ட பல சாதனங்களுடன் இணக்கமாக இருக்கும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் DA உயர்வு – நவோதயா வித்யாலயா!

இது தவிர, செய்திகள் மறைந்து போகும் முறை, ஃபிளாஷ் அழைப்புகள் மற்றும் VIEW ONCE உள்ளிட்ட பல அம்சங்களையும் வாட்ஸ் அப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்த தகவல்களையும் மார்க் ஜுகர்பெர்க் உறுதிப்படுத்தியுள்ளார். அதன் படி பல சாதன பயன்பாடு மற்றும் ஒருமுறை பார்வை உள்ளிட்ட அம்சங்களும் விரைவில் தொடங்கும் என மார்க் விளக்கம் கொடுத்துள்ளார். எனவே இந்த அம்சங்களை விரைவில் வாட்ஸ் அப் செயலியில் எதிர்பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!