விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – வைரலாகும் ப்ரோமோ!

0
விஜய் டிவி 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - வைரலாகும் ப்ரோமோ!
விஜய் டிவி 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - வைரலாகும் ப்ரோமோ!
விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – வைரலாகும் ப்ரோமோ!

தமிழுக்கு 1000 பீஸ்க்கான கான்ட்ராக்ட் கிடைக்கவே கூடாது என சந்திரகலாவும் சூர்யாவும் திட்டம் போட்டனர். அந்த சதி திட்டத்தையும் தாண்டி தமிழுக்கு அந்த கான்ட்ராக்ட் கிடைக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழும் சரஸ்வதியும்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. படிக்காத தமிழுக்கு படித்த பெண்ணை தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என குடும்பத்தினர்கள் நினைத்த நிலையில் படிக்காத சரஸ்வதியை தமிழ் திருமணம் செய்துகொண்டார். சரஸ்வதி படிக்கவில்லை என்கிற உண்மை கோதைக்கு தெரியவந்து பல மாதங்களாக சரஸ்வதியை கோதை ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சரஸ்வதியை கோதை தனது மருமகளாக ஏற்றுக்கொண்டு வருகிறார்.

Exams Daily Mobile App Download

தமிழ் படிக்கவில்லை என்றாலும் கூட சுயமாக ஒரு தொழில் தொடங்கியிருக்கிறார். அதில் 1000 மெட்டிரியல்களை செய்யும் ஆர்டரை தமிழுக்கு சரஸ்வதி வாங்கி கொடுக்கிறார். மேலும், இந்த ஆர்டரை மறுநாள் காலை 10 மணிக்குள் முடித்து தர வேண்டும் எனவும் கூற அதனையும் தமிழ் சரியென ஏற்றுக்கொண்டுள்ளார். கண்டிப்பாக தமிழால் காலைக்குள் இந்த ஆர்டரை முடிக்கவே முடியாது என கார்த்தி தமிழை செய்ய விடாமல் தடுக்கிறார். தன்னால் கண்டிப்பாக காலைக்குள் இந்த ஆர்டரை செய்து முடிக்க முடியும் என அந்த கம்பெனியில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களையும் அழைத்து கூறுகிறார்.

அனைத்து பீஸ்களும் தரத்தில் நன்றாக இருக்க வேண்டும் என தமிழ் அனைவரிடமும் கூறுகிறார். இந்த வேலை கண்டிப்பாக பாதியிலேயே தடைபட்டு நிற்க வேண்டும் என சொல்லி சந்திரகலா பல இடையூறுகளை செய்கிறார். இருப்பினும், தமிழ் சரியாக அனைத்து பீஸ்களையும் ரெடி செய்கிறார். கண்டிப்பாக தமிழுக்கு இந்த ஆர்டர் கிடைக்க கூடாது என சொல்லி செய்த அனைத்தையும் உடைக்க சொல்கிறார் சந்திரகலா. ஆர்டர் கொடுத்தவரும் அதை பார்த்து கோவப்பட்டு செல்கிறார். உடனடியாக சரஸ்வதி நல்ல பீஸ்ஸை எடுத்துவந்து காட்டுகிறார். அந்த நல்ல பீஸ்ஸை பார்த்ததும் தமிழுக்கே மொத்த ஆர்டரையும் கொடுக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!