விரைவில் தொடங்க இருக்கும் “பாக்கியலட்சுமி சீசன் 2” – பாக்கியாவாக பிரபல நடிகை! ப்ரோமோ ரிலீஸ்!

0
விரைவில் தொடங்க இருக்கும்
விரைவில் தொடங்க இருக்கும் "பாக்கியலட்சுமி சீசன் 2" - பாக்கியாவாக பிரபல நடிகை! ப்ரோமோ ரிலீஸ்!
விரைவில் தொடங்க இருக்கும் “பாக்கியலட்சுமி சீசன் 2” – பாக்கியாவாக பிரபல நடிகை! ப்ரோமோ ரிலீஸ்!

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலான “பாக்கியலட்சுமி” சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிகை நதியா நடிக்க இருக்கிறார். அது குறித்த எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி 2:

சின்னத்திரை சீரியல் எல்லாமே மக்களிடம் நல்ல புகழை பெற்றுள்ளது. காரணம் வாழ்க்கை நடைமுறைகளை கதையாக எடுப்பது தான். முன்னதாக குடும்ப சீரியல்கள் மட்டுமே வந்த நிலையில் தற்போது காதல் சண்டை போட்டி சமூக விழிப்புணர்வு என பல கதைகளை கொண்ட சீரியல்கள் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு வெளியாகி உள்ளது. சினிமா நடிகர் நடிகைகளுக்கு தான் ரசிகர் கூட்டம் இருந்த நிலையில் தற்போது சீரியல் நடிகர் நடிகைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர்.

எழிலிடம் ராதிகா பற்றி உண்மையை சொல்லப் போகும் ராமமூர்த்தி தாத்தா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அந்த வகையில் பெண்களின் முன்னேற்றம் தான் குடும்பத்தின் முன்னேற்றம் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் சீரியல் தான் விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல். இந்த சீரியலில் கோபி பாக்கியாவை ஏமாற்றுவதை பார்த்து பலர் கொந்தளித்து இருக்கின்றனர். தமிழக மக்கள் அனைவருமே பாக்கியாவிற்கு ஆதரவாக பல இடங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். சீரியல் தான் என்ற நிலை மாறி தங்களது குடும்பத்தில் ஒருவராக பாக்கியாவை பார்க்க தொடங்கிவிட்டனர்.

கருப்பு நிற பென்ஸ் வாங்க கருப்பு உடையில் வந்த சஞ்சீவ், ஆலியா குடும்பம் – வைரலாகும் வீடியோ!

இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிய இருப்பதாகவும் இதன் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருப்பதாகவும் அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்கியாவாக முன்னணி நடிகை நதியா நடிக்க இருக்கிறார். அவர் இந்த சீரியல் மூலமாக சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அவர் பாக்கியா கதாபாத்திரத்தில் பொருத்தமாக இருப்பதால் ரசிகர்கள் சீசன் 2 விரைவில் தொடங்க வேண்டும் என எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!