இந்திய ரயில்களில் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் – தகவல் வெளியீடு!

0
இந்திய ரயில்களில் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் - தகவல் வெளியீடு!
இந்திய ரயில்களில் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் - தகவல் வெளியீடு!
இந்திய ரயில்களில் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் – தகவல் வெளியீடு!

நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த நிலையில் ரயில்களிலும் இந்த திட்டம் கூடிய விரைவில் அமலாக இருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதிய திட்டம்

நாடு முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் தடை விதித்தது. அதாவது உலகளவில் 130 மில்லியன் மெட்ரிக் டன்கள் கொண்ட பிளாஸ்டிக்களை உபயோகித்து வருகின்றோம். மேலும், இந்த ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் அதிக அளவில் சுற்றுசூழல் மாசடைகிறது. இதனை தடுக்க வேண்டும் என்றால் மக்கள் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை முற்றிலுமாக குறைக்க வேண்டும்.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ரூ.300 டிக்கெட் நாளை (ஆக.2) வெளியீடு!

மேலும், சுற்றுசூழலின் பாதுகாப்பிற்காக ஜூலை 1 ஆம் தேதி முதல் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில், தற்போது ஐஆர்சிடிசி ரயில்களிலும் இந்திய ரயில்வேயின் கேட்டரிங் துறையில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கவுள்ளது. அதாவது, ரயில்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களான தட்டுகள், கரண்டிகள், கோப்பைகள், கண்ணாடிகள், பார்சல் பாக்ஸ்கள் போன்ற பொருட்கள் விரைவில் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், இது போன்ற பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக பயணிகளுக்கு பாக்குமட்டை, மரம் மற்றும் அட்டை பெட்டிகளால் செய்யப்பட்ட பொருட்கள் மூலமாக உணவு வழங்கலாம் என மத்திய அமைச்சகம் ஆலோசனை கூறியுள்ளது. மேலும், இந்த புதிய திட்டம் கூடிய விரைவில் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை அறிமுகம் செய்யும் வரைக்கும் ரயில்களில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை குறைக்கும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here