Post Office MIS திட்டத்தில் மாதந்தோறும் ரூ.5,000 வரைக்கும் வட்டி – முழு விவரங்கள் இதோ!

0
Post Office MIS திட்டத்தில் மாதந்தோறும் ரூ.5,000 வரைக்கும் வட்டி - முழு விவரங்கள் இதோ!
Post Office MIS திட்டத்தில் மாதந்தோறும் ரூ.5,000 வரைக்கும் வட்டி - முழு விவரங்கள் இதோ!
Post Office MIS திட்டத்தில் மாதந்தோறும் ரூ.5,000 வரைக்கும் வட்டி – முழு விவரங்கள் இதோ!

போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் சிறப்பான பல நலன்களை கொடுக்கும் MIS திட்டத்தில் சேர விரும்பினால் ரூ.1000 இருந்தாலே போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் ரூ.5,000 வரைக்கும் வட்டி வழங்கப்படுகிறது.

MIS திட்டம்:

வங்கிகளை காட்டிலும் தபால் நிலையங்களில் தான் அதிக அளவில் வட்டியும், கூடுதல் பாதுகாப்பும் கிடைப்பதால் பொதுமக்கள் பலரும் தபால் நிலையங்களில் சேமிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பொதுமக்களுக்காகவே போஸ்ட் ஆபீஸில் சிறப்பான பல சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. அதிலும், அதிகமான பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர வருமான திட்டம் (எம்ஐஎஸ்) திட்டத்தை பற்றி தற்போது பார்க்கலாம். அதாவது, இந்த திட்டத்தில் 6.6% வரைக்கும் வட்டி வழங்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

மேலும், மாதாந்திர வருமான திட்டத்தில் கூட்டு கணக்கில் ரூ .9 லட்சம் வரைக்கும் டெபாசிட் செய்தால் மாதம் ரூ.4,950 வரைக்கும் சம்பாதிக்க முடியும். மேலும், இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் என்பதால் 5 ஆண்டுகளுமே மாதந்தோறும் 4,950 ரூபாய் வட்டி கிடைக்கிறது. விருப்பப்பட்டால் முதிர்வு காலத்தை அதிகரிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவே, தனி கணக்காக இருந்தால் ரூ.2,475 வரைக்கும் சம்பாதிக்க முடியும். அதாவது, இந்த திட்டம் நிலையான ஒரு வருமானத்திற்கு வழிவகுக்கிறது.

பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!

எனவே, மாதாந்திர வருமான திட்டத்தில் சேர விரும்பும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சத் தொகையாக ரூ. 1,000 செலுத்தி சேர்த்துக்கொள்ளலாம். அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரைக்கும் கூட முதலீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவே, கூட்டு கணக்காக இருந்தால் ரூ.9 லட்சம் வரையிலும், தனிநபர் கணக்கிற்கு ரூ.4.5 லட்சம் வரைக்கும் மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு எக்கச்சக்க பலன்களை கொடுக்கும் இந்த திட்டத்தில் பயனர்கள் உடனடியாக சேரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!