Post Office ‘இந்த’ திட்டத்தில் ரூ.14 லட்சம் வரை ரிட்டன்ஸ் – முழு விபரம் இதோ!

0
Post Office 'இந்த' திட்டத்தில் ரூ.14 லட்சம் வரை ரிட்டன்ஸ் - முழு விபரம் இதோ!
Post Office 'இந்த' திட்டத்தில் ரூ.14 லட்சம் வரை ரிட்டன்ஸ் - முழு விபரம் இதோ!
Post Office ‘இந்த’ திட்டத்தில் ரூ.14 லட்சம் வரை ரிட்டன்ஸ் – முழு விபரம் இதோ!

அஞ்சல் அலுவலகத்தில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தற்போது இந்த திட்டத்தின் கீழ் சேமிப்பதன் மூலமாக 14 லட்ச ரூபாய் வரை சேமிப்பு பணம் கிடைக்கிறது. இந்த திட்டம் குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சேமிப்புத் திட்டம்

இந்திய அஞ்சல் துறையில் முதலீடு செய்வதால் வங்கிகளை விட இரண்டு மடங்கு லாபத்தை பெற முடிகிறது. அத்துடன் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதால் பணத்திற்கு முழு பாதுகாப்பு கிடைக்கிறது. அதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் சாமானிய கூட இந்த சேமிப்பு திட்டங்களில் அதிகளவு முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதில் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கென்று சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம், ஆண் குழந்தைகளுக்கென்று பொன்மகன் சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்களுக்கான 5 வருட கால சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.

SSC தேர்வு எழுதுவோருக்கான சூப்பர் அறிவிப்பு – தமிழக அரசின் ஏற்பாடு!

இதில் தற்போது மூத்த குடிமக்களுக்கான 5 வருட கால சேமிப்பு (SCSS) திட்டத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என விரிவாக பார்ப்போம். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் உங்களுக்கென்று மிகப்பெரிய தொகை கிடைக்கும். இதில் 7.4 சதவீத வட்டி விகிதம் கிடைப்பதால் வட்டி பணமும் அதிகமாக கிடைக்கிறது. இத்திட்டத்தில் இணைய விரும்பும் நபர்கள் உங்கள் பகுதியில் அருகில் இருக்கும் தபால் நிலையத்திற்கு சென்று இத்திட்டத்தில் இணைவதற்கான படிவத்தை பெற்று உடனே இணைந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை செலுத்தி கணக்கை தொடங்கலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் சேமிப்பதால் வருமான வரிச் சட்டம் 80சி-இன் கீழ் வரி விலக்கும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்வதால் முதிர்வு காலத்தின் முடிவில் வட்டி கணக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படும். அதன்படி உங்களுக்கு வட்டி பணம் மட்டும் ரூ.4.28 லட்சம் வரை கிடைக்கும். இதையடுத்து முதிர்வு காலத்தின் முடிவில் நீங்கள் முதலீடு செய்த தொகையும் வட்டி தொகையும் சேர்ந்து மொத்தமாக ரூ.14 லட்சம் வரை சேமிப்பு பணமாக கிடைக்கும். அதனால் வயது முதிர்ந்தவர்கள் ஓய்வு காலத்தில் நிதி நெருக்கடியின்றி நிம்மதியாக இருக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!