EPFO பயனர்களுக்கு ரூ.1 லட்சம் வரை முன்பணம் – மருத்துவ உதவித்தொகை பெறும் முறை!

0
EPFO பயனர்களுக்கு ரூ.1 லட்சம் வரை முன்பணம் - மருத்துவ உதவித்தொகை பெறும் முறை!
EPFO பயனர்களுக்கு ரூ.1 லட்சம் வரை முன்பணம் - மருத்துவ உதவித்தொகை பெறும் முறை!
EPFO பயனர்களுக்கு ரூ.1 லட்சம் வரை முன்பணம் – மருத்துவ உதவித்தொகை பெறும் முறை!

மத்திய அரசு பிஎஃப் வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில் தொடர்ந்து பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. தற்போது அந்த வகையில் பிஎஃப் வாடிக்கையாளர்கள் மருத்துவ அவசரத்திற்காக ரூ.1 லட்சம் வரை முன்பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

பிஎஃப் பயனர்கள்:

இந்தியாவில் தற்போது கொரோனா நோய்பரவல் காரணமாக பல தரப்பு மக்கள் தங்களது வாழ்வாதரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் பிஎஃப் வாடிக்கையாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு மத்திய அரசு பல்வேறு முக்கிய அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அவை அனைத்தும் பிஎஃப் வாடிக்கையாளர்கள் மிக்க பயனடையும் வகையில் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது கொரோனா தொற்று காலத்தில் தங்களது மூன்று மாத ஊதியத்தை முன்பணமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தது.

TN Job “FB  Group” Join Now

ssc

மேலும் இதனை திருப்பி செலுத்த வேண்டாம் என்றும் தெரிவித்தது. தற்போது இதனை தொடர்ந்து பிஎஃப் வாடிக்கையாளர்கள் கடும் நோயிக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் பயடையும் வகையில் ஓர் அறிக்கை வெளியாகியுள்ளது. அஃதாவது பிஎஃப் வாடிக்கையாளர்கள் மருத்துவ அவசரத்தில் கீழ் EPFOல் இருந்து ரூ.1 லட்சம் வரை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனைகளில் சேர்க்கும் செலவினை சமர்ப்பிக்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாப்பிள்ளை கெட்அப், கூலிங் கிளாஸ், பின்றீங்களே – பாரதி கண்ணம்மா பிரபலத்தின் ரீல்ஸ்!

மருத்துவ அவசரநிலைக்காக வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க விரும்பினால் EPFO வலைத்தளத்திற்கு செண்டு UAN மற்றும் தங்களின் கடவுச்சொற்களை உள்ளிட வேண்டும். பின்பு ஆன்லைன் சேவை என்னும் ஆப்ஷனை தேர்வு செய்து உரிமைகோரல் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து வரும் புதிய தலத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கினை சரிபார்த்துக்கொண்டு EPFO விதிமுறையை அறிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில் சுயதொழில் செய்பவர்களுக்கு இ-பதிவில் தனி வசதி – அரசு அறிமுகம்!

இதனை தொடர்ந்து ஆன்லைன் உரிமை கோரலுக்கான Proceed என்னும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதில் மருத்துவ அவசர நிலை என்னும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இந்த ஆப்சன் தகுதி உடைய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே காட்டப்படுகிறது. மேலும் மருத்துவ சேவைகளுக்காக ரூ.1 லட்சத்தை எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!