மத்திய அரசில் 83,100 வரை சம்பள வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

0
மத்திய அரசில் 83,100 வரை சம்பள வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
மத்திய அரசில் 83,100 வரை சம்பள வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
மத்திய அரசில் 83,100 வரை சம்பள வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையமான SSC யில் புதிய வேலைவாய்ப்பு உள்ளதாக மத்திய அரசானது அறிவித்துள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

மத்திய அரசு:

இந்தியாவில் உள்ள மத்திய அரசு பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை கண்டறிய உருவாக்கப்பட்ட அமைப்புதான் ‘ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன்’ (Staff selection commission). இந்த அமைப்பானது அலகாபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா, கவுஹாத்தி, சென்னை, பெங்களூரு 7 மண்டலங்களாக அலுவலகங்களை கொண்டு இயங்குகிறது. மேலும் இந்த SSC தேர்வானது நான்கு நிலைகளில் நடைபெறுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்படுவர்.

Exams Daily Mobile App Download

தற்போது மத்திய பணியாளர் தேர்வாணையமான எஸ்.எஸ்.சி தில்லி காவல் துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள தலைமை காவலர், உதவி ஆபரேட்டர், டெலி-பிரிண்டர் ஆபரேட்டர்(டிபிஓ), கான்ஸ்டபிள் (ஓட்டுநர்) பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. மேலும் பணியிடங்கள் குறித்து தகவல், கல்வி தகுதி, சம்பளம் குறிப்பிட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றும் அறிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலினை பார்க்க வந்த நபர், அனுப்பி வைத்த போலீசார் – வெளியான வீடியோ!

1. head constable – Assistant wireless Operator(AWO), மற்றும் Tele printer operaor(TPO) போன்ற பணியிடங்களுக்கு ஆண்கள் 573,பெண்களுக்கு 284 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், கல்வி தகுதி 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள்,மெக்கானிக் ஆபரேட்டர்,எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் சிஸ்டத்தின் வர்த்தகத்தில் தேசிய வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும்,சம்பளம் ரூ. 25,500-83,100 என்று தெரிவித்துள்ளது. மேலும் வயது வரம்பு 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

2. constable(driver) பணியிடங்களுக்கு 1411 காலியிடங்கள் இருப்பதாகவும், கல்வித்தகுதி 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமமும் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் வயது வரம்பு 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும், சம்பளம் ரூ.21,700 – 69,100 என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுக்கு கணினி வழி,எழுத்துத் தேர்வு,மற்றும் உடற்திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க 29.7.2022 கடைசி நாள் என்றும் தெரிவித்துள்ளது.

தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையத்தளத்தின்மூலம் விண்ணப்பிக்க வேண்டும் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!