வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு 7 % வரை வட்டி – முழு விவரங்கள் இதோ!

0
வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு 7 % வரை வட்டி - முழு விவரங்கள் இதோ!
வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு 7 % வரை வட்டி - முழு விவரங்கள் இதோ!
வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு 7 % வரை வட்டி – முழு விவரங்கள் இதோ!

இந்தியாவில் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் சேமிப்பு கணக்கிற்கு நல்ல வட்டி விதத்தை அளிக்கின்றனர். மிகப்பெரிய வங்கிகளை ஒப்பிடுகையில் சில சிறிய வங்கிகள் சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டிகளை வழங்குகிறது.

சேமிப்பு திட்டங்கள்:

இந்தியாவில் பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். இந்த நேரத்தில் பலருக்கு சேமிப்பு திட்டங்களில் இருந்த பணம் கை கொடுத்தது. அதனால் தற்போது மக்கள் சேமிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு ஏற்றவாறு வங்கிகளும், அஞ்சல் நிலையங்களும் பிற நிதி நிறுவனங்களும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த சேமிப்பு திட்டங்களில் மிகப்பெரிய வங்கிகளை விட சில சிறிய வங்கிகள் சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டிகளை வழங்கப்படுகிறது.

EPFO நிதியை கணக்கிட புதிய வழிமுறை – முழு விவரம் இதோ!

மேலும் ஈக்விடாஸ், AU வங்கி, உஜ்ஜீவன் வங்கி மற்றும் ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் போன்ற தனியார் வங்கிகள் அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. இதில் ஈக்விடாஸ் சேமிப்பு கணக்கிற்கு 3.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த நிறுவனம் இறுதி இருப்புத் தொகையைப் பயன்படுத்தி வட்டி கணக்கிடப்படும். மேலும் இறுதி தொகைக்கு ஏற்றவாறு வட்டி விகிதம் அதிகரிக்கும். அடுத்தாக AU ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் 3.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் காலாண்டுக்கு ஒரு முறை வட்டியானது வழங்கபடுகிறது. இதிலும் வட்டி விகிதமானது வாடிக்கையாளர் தனது சேமிப்பு கணக்கில் இருப்பில் வைத்திருக்கும் தொகைக்கு ஏற்ப வழங்கப்படும். ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் இதில் வட்டி விகிதமானது இருப்பு தொகை அதிகரிப்பதை பொறுத்து 3.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறையும் வட்டி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!