கனமழை காரணமாக இன்று (செப் 11) பள்ளிகளுக்கு விடுமுறை.. மேலும் நீடிக்க வாய்ப்பு – UP அரசு அறிவிப்பு!
உத்திர பிரதேசம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக லக்னோ பள்ளிகளுக்கு இன்று (செப்.11) விடுமுறை விடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடுமையான மின்னல் ஏற்படுவதால் லக்னோ மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று (செப் 11) மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து லக்னோ மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கையில், மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அது மட்டுமில்லாமல் கடந்த சில மணி நேரங்களாக லக்னோவில் நிலவும் மோசமான வானிலை காரணமாகவும் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு / அரசு சாரா / தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும் இந்த உத்தரவு லக்னோ மாவட்டத்தின் அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து நாளையும் (செப் 12) பள்ளிகளுக்கு விடுமுறை விட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.