ஐக்கிய நாடுகளின் அமைப்பு

0

ஐக்கிய நாடுகளின் அமைப்பு

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download

பொது அறிவு பாடக்குறிப்புகள் Download 

  • முதல் உலகப் போருக்குப் பின்னர் நாடுகளின் கூட்டமைப்பு என்ற அமைப்பு துவங்கப்பட்டது. ஆனால் அது தோற்றுப் போனது.
  • அதன் பின்னர் உலகிலேயே மிகப் பெரிய நாடுகளிடையேயான அமைப்பான ஐக்கிய நாடுகளின் சபை தோற்றுவிக்கப்பட்டது.
  • ஐ-நாவுக்காக பட்டயம் அல்லது அரசமைப்பு இரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் ஆலோசனைப்படி (வாஷிங்டன் DCயில் உள்ள) தம்பாடன் ஒக்ஸ்ல் வைத்து தயாரிக்கப்பட்டது.
  • முதன் முறை கூட்டம் ஜனவரி 1946ல் லண்டனில் நடைபெற்றது. அதில் டிரிக்வேலீ (நார்வே) என்பவர் முதல் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
  • இதன் தலைமையிடம் முதல் அவென்யூ, ஐ.நா. பிளாசா, நியூயார்க் நகரம், நியூயார்க்கில் அமைந்துள்ளது. இது அமைவதற்கான பதினேழு ஏக்கர் நிலத்தை “ஜான் னு ராக்பெல்லர்” என்பவர் நன்கொடையாக வழங்கினார்.
  • i-நாவின் நோக்கங்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டது.
    1. பாதுகாப்பு அவை.
    2. நீதீ, 3. நலம், 4. மனித உரிமை.
  • எந்த ஒரு நாடும் மற்றொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடாது என்பது ஐ.நாவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
  • உலக சமாதானம், பாதுகாப்பு மற்றும் அரசியல் பொருளாதார, சமூக நிலையில் ஒத்துழைப்பு இவற்றிற்காக உலக நாடுகள் தமக்குள் ஏற்படுத்திக் கொண்ட அமைப்பே ஐக்கிய நாடுகள் சபை (United Nations).
  • ஐ-நாவில் இப்போது 192 நாடுகள் உறுப்பினராக உள்ளன. ஐ.நா. உருவானபோது (1945) அதில் வெறும் 50 நாடுகளே உறுப்பினராக இருந்தன.
  • உலக அமைதிக்கும், உலக நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கும் தேவையான வழி காட்டு நெறிமுறைகள் அடங்கிய ‘அட்லாண்டிக் சார்ட்டரே’ (1941, ஆகஸ்டு 14) ஐ.நா. உருவாகத்தின் முதல் படி.
  • 1941-ல் உருவான அட்லாண்டிக் சார்ட்டரில் கையெழுத்திட்டவர்கள் அப்போதைய அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் மற்றும் பிரிட்டீஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.
  • அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் பிரிட்டீஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ரஷ்யத் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் 1945ல் யால்டாவில் சந்தித்துக் கொண்ட போது, லீக் ஆஃப் நேஷின்சின் அடிப்படையில் ஐ.நா. சபையை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
  • ஐக்கிய நாடுகள் சபை என்னும் பெயரைப் பிரிந்துரைத்தவர் அமெரிக்க அதிபர் பிராங்ளின் டி. ரூஸ்வெல்ட்.
  • 1945, ஜூன் 26-ம் தேதி சான்பிரான்சிஸ்போவில் நடைபெற்ற மகாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த ஐ.நா. சார்ட்டரில் கையெழுத்திட்டார்கள். போலந்து பிற்பாடு இதில் கையெழுத்திட்டது.
  • 1945, அக்டோபர் 24ல் ஐ.நா. அமைப்பு நிலவில் வந்தது. எல்லா வருடமும் அக்டோபர் 24ம் தேதி ஐ.நா. தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • 1946 ஜனவரியில் இலண்டனில் இதன் முதல் கூட்டம் நடைபெற்றது.
  • ஐ.நா. அமைப்பின் முதல் பொதுச் செயலர் நார்வே நாட்டைச் சேர்ந்த டிரைக் வே லை.
  • தலைமையகம்: நியூயார்க்
  • முகவரி: First Avenue, UN Plaza, New York City, New Yark, USA.
  • சின்னம்: இளம் நீலத்தின் நடுவே அமைந்த வெள்ளை வட்டம்.

  • கொடி: 1947 அக்டோபர் 20ல் ஐ.நா. பொதுச் சபை ஐ.நா.வுக்கான கொடியை அங்கீகரித்தது. இளநம் நீல நிற பின்புறத்தில் வெண்மை நிற ஐ.நா. சின்னத்தில், வட துருவத்திலிருந்து உயர்ந்து நிற்கும் உலக வரைபடத்தை இரு ஆலிவ் மரக் கிளைகள் (அமைதியின் சின்னம்) சுற்றி நிற்பதாக அமைந்ததே ஐ.நா. கொடி. 1942, அக்டோபர் 20ம் தேதி அங்கீகரிகப்பட்டது. இந்த கொடிக்கு மேலே எந்த நாட்டுக் கொடியையும் பறக்க விடக்கூடாது.
  • ஆட்சி மொழிகள்: சீனம், அரபி, ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ்.
  • செயலகத்தில் ஆங்கிலம், பிரெஞ்சுமே பயன்படுத்தப்படுகிறது. ஆவணங்கள் முதன் முதலில் ஆறு அலுவலக மொழிகளிலும் தயார் செய்யப்படுகிறது. பிற்பாடு உறுப்பினர் நாடுகளுக்கு அவரவர் மொழியில் மொழி பெயர்த்து வழங்கப்படுகிறது.
  • குறிக்கோள்: உலகில் அமைதியும், பாதுகாப்பையும் உறுதி செய்தல், வறுமை, நோய், எழுத்தறிவின்மையை அகற்றல் ஒன்றுபட்டுச் செயல்பரிதல். உலக நாடுகளிடையே ஒற்றுமையை வளர்த்தெடுத்தல், இந்த பொது இலட்சியங்களை அடைய நாடுகளுக்கு உதவும் மையப்புள்ளியாக நிலை நிற்கிறது.
  • உறுப்பினராதல்: ஐ.நா. சார்ட்டரை அங்கீகரித்து அதை நிறைவேற்ற விரும்பும் எந்தவொரு நாடும் ஐ.நா.வின் உறுப்பினராகலாம்.
  • அனுமதி: ஐ.நா. பாதுகாப்புச் சபையின் சிபாரிசின் பேரில் புதிய நாடுகளுக்கு உறுப்பினர் தகுதி வழங்கப்படுகிறது. இதற்கு பொதுச் சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும்.
  • நிரந்தர உறுப்பினர்கள்: சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் உண்டு. ஒரு தீர்மானம் அங்கீகரிக்கப்படுவதற்கு அனைத்து உறுப்பினர்களில் ஆதரவு வாக்கு வேண்டும். பாதுகாப்புச் சபையின் ஏனைய பத்து உறுப்பினர் நாடுகளின் அங்கீகரித்தாலும், ஏதொவதொரு நிரந்தர உறுப்பினர் நாடு வீட்டோ செய்தால் அந்த தீர்மானம் தள்ளுபடி செய்யப்படும்.
  • தற்காலிக உறுப்பினர்கள்: வியட்நாம், கோஸ்டாரீகா, குரோஷியா, லிபியா, புர்கிலோ ஃபாஸோ (டிசம்பர் 31, 2009 வரை) ஆஸ்திரியா, ஜப்பான், மெக்ஸிகோ, துருக்கி, உகாண்டா (டிசம்பர் 31, 2010 வரை)

ஐ.நா.வில் இந்தியா

  • ஐ.நாவில் இந்தியா உறுப்பினரான நாள் 1945 அக்டோபர் 30.
  • இந்தியாவுக்காக ஐ.நா. சார்ட்டரில் கையெழுத்திட்டவர் சர்.இராமசாமி முதலியார்.
  • உலக சுகாதார அமைப்பின் தலைவரான ஒரே இந்தியப் பெண்மணி-ராஜ்குமாரி அம்ருத் கவுர்.
  • எட்டு மணி நேரம் தொடர்ச்சியாக ஐ.நா.வில் உரையாற்றியவர் – வி.கே. கிருஷ்ணமேனன் (1957).
  • ஐ.நா. மனித உரிமைக் கழகத்தின் துணை இணக்குநராக பதவி வகித்தவர் – ஜஸ்டிஸ் பி.என்.பகவதி.
  • ஐ.நா. அண்டர் செகரெட்டரியராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் சசி தரூர்.
  • இன்டர் பார்லிமென்டரி யூனியன் ஆயுட்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப் பெண்மணி – நஜ்மா ஹெப்துல்லா.
  • ஐ.நா.வில் முதன் முதலாக இந்தியில் உரையாற்றியவர் – எ.பி. வாஜ்பாய்.
  • ஐ.நா.வில் பாட அனுமதி பெற்ற முதல் பாடகி – எம்.எஸ்.சுப்புலெட்சுமி
  • உலக வங்கியின் ‘இவாலுவேஷன்’ டைரக்டர் ஜெனராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் – வினோத் தாமஸ்.
  • உலக சுகாதாரக் கழகத்தின் ஆடிட்டராக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் – விஜயேந்திர என் கவுர்.
ஐக்கிய நாடுகளின் அமைப்பு PDF Download

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Facebook  ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel  Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!