இந்த மாத இறுதிக்குள் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
இந்த மாத இறுதிக்குள் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்த மாத இறுதிக்குள் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்த மாத இறுதிக்குள் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

ஜூன் மாத இறுதிக்குள் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், முக்கிய அமைச்சர்கள் பதவி விலக்கப்பட்டு 2024 பொதுத் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்றிய அமைச்சரவை:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த மாத இறுதிக்குள் ஒன்றிய அமைச்சரவை மாற்றியமைக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், அமைச்சரவை மாற்றியமைப்பது குறித்து டெல்லியில் பாஜக கட்சியின் மூத்த தலைவர்கள் சந்தித்து சிறியளவில் மாற்றம் ஏற்படுத்தலாம் என திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், மோடி இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கா சுற்றுப்பயணமாக செல்ல இருப்பதால் அதற்குள் ஒன்றிய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு – மத்திய அரசு ஒப்புதல்!

மேலும், ஒன்றிய அரசில் வேளாண்மை, நிதி, நீர் வளம், சுற்றுசூழல் மின்சாரம், விமான போக்குவரத்து, கிராமப்புற வளர்ச்சி துறையில் இருக்கும் அமைச்சர்களை பதவியில் இருந்து விடுவித்து 2024 பொதுத் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்க பாஜக தலைவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்ததாக, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், தெலுங்கனா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா மாநிலங்களில் உள்ள பாஜக நிர்வாகிகளை பதவி மாற்றம் செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!