பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் – நாளை துவக்கம்!

0
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் - நாளை துவக்கம்!
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் - நாளை துவக்கம்!
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் – நாளை துவக்கம்!

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ளும் அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நாளை (ஜூன் 23) நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சில முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமைச்சரவை கூட்டம்

மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ளும் அமைச்சரவை கூட்டமானது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் துவங்க உள்ளது. தலைநகர் டெல்லியில் நாளை (ஜுன் 23) நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடி சில முக்கிய அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.

தமிழகத்தில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை – மக்கள் கவனத்திற்கு!

இதற்கு பிறகு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. முன்னமே அறிவிக்கப்பட்டபடி நாளை (ஜூன் 23) காலை 11 மணிக்கு துவங்கும் இந்த கூட்டத்தை பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இதை தொடர்ந்து மத்திய அரசின் அறிவிப்பின்படி மாநிலங்களுக்கான தடுப்பூசிகள் ஒதுக்கீடு, மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச தலைவர்களுடன் நாளை மறுநாள் நடைபெறவுள்ள கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

TN Job “FB  Group” Join Now

இதற்கிடையில் தமிழக முதல்வர், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரதமரை சந்தித்து தமிழகம் சார்பில் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இந்த கோரிக்கைளுக்கும், பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் கலந்துரையாடி, ஆலோசனை செய்து, அதற்குரிய பதிலளிப்பார் என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!