தமிழகத்தில் இனி அனைத்து பகுதிகளிலும் சீரான மின் விநியோகம் – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!

0
தமிழகத்தில் இனி அனைத்து பகுதிகளிலும் சீரான மின் விநியோகம் - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!
தமிழகத்தில் இனி அனைத்து பகுதிகளிலும் சீரான மின் விநியோகம் - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!தமிழகத்தில் இனி அனைத்து பகுதிகளிலும் சீரான மின் விநியோகம் - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!
தமிழகத்தில் இனி அனைத்து பகுதிகளிலும் சீரான மின் விநியோகம் – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதன் முடிவில் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதை பற்றி பார்ப்போம்.

மின் விநியோகம்

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. அப்படியாக இருப்பினும் பொதுமக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மின்சார வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக மரங்கள் மின்மாற்றிகள் மீது சாய்ந்து விழுந்துள்ளன. அதனால் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை சீர் செய்யும் பொருட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் ஒன்று நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

மேலும், இக்கூட்டத்தில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மழையின் போது சீரான மின் விநியோகம் வழங்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் அமைச்சர் கூறியிருப்பதாவது, காவிரி கரையோர பகுதிகளில் நீர் தேக்கம் ஏற்பட்டு மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள பகுதிகளில் நீர் வடிந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும் என்று கூறியுள்ளார். மேலும் காவிரி கரையோர மாவட்டங்களில் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு TNSED செயலி குறித்த புதிய உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

மேலும் தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, 234 தொகுதிகளிலும் சீரான மின் விநியோகம் வழங்க அனைத்து தொகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் இவர்கள் 24 மணி நேரமும் பணி செய்வார்கள் என்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு மின் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம், மின் கசிவுகள் ஏற்படாத வண்ணம் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளவார்கள். இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கு ஜார்ச்சர் நிலையங்கள் அமைக்க 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here