தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரி ஊதியம் – நீதிமன்றம் உத்தரவு!

0
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரி ஊதியம் - நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரி ஊதியம் - நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரி ஊதியம் – நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு மாதிரி ஊதியம் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தற்போது புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நீதிமன்றம் உத்தரவு:

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரி ஊதியம் வழங்க வேண்டும் என 1993 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு வழங்கப்படவில்லை எனவும், 1993 ஆம் ஆண்டு வெளியான அரசாணை படி பணபலன்கள் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் ஏகப்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், மனுதாரர்களுக்கு அரசின் உத்தரவின் படி பணபலன்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கு குறித்த மேல்முறையீட்டு மனுவில் வேறு வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டது. அதனால் அந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. அதில் 1993 ஆம் ஆண்டு வெளியான அரசாணையின் படி அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் 2017 மார்ச்சில் இருந்து பணபலன்கள் கொடுக்க வேண்டும் என தெரிவித்தது.

ஐடி ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு.. நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் பணியாளர்கள்!

Exams Daily Mobile App Download

மேலும் 2016 ஆம் ஆண்டிற்கு பின் பணபலன்கள் கேட்கும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் 2016க்கு பிறகு புதிய வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது எனவும், நிவாரணம் கேட்கும் மனுதாரருக்கு உரிமை இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2013 ஆம் ஆண்டிலிருந்து வழக்கு தொடர்ந்துள்ளதால் நிவாரணம் வழங்குவது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அரசு தரப்பில் சரியாக விளக்கம் அளிக்காத நிலையில், பள்ளிக் கல்வி துறை ஆணையர் ஆஜராகி விளக்கம் வழங்க உத்தரவிடப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!