இந்தியாவில் வேலையின்மை விகிதம் – ஜூன் மாதத்தில் 9.19% குறைவு!
கொரோனா பேரலை காரணமாக பலரும் தங்களது வேலைகளையும், தொழில்களையும் இழந்து வந்த நிலையில் நாடு முழுவதும் வேலை இழப்பு விகிதம் அதிகரித்து வந்தது. இதனிடையே கடந்த ஜூன் மாதத்தில் இந்த விகிதமானது சற்று குறைந்துள்ளதாக தரவுகள் கூறுகிறது.
வேலை இழப்பு
நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பேரலையாக உருவெடுத்த கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகள் முடங்கியது. இதனால் அரசு, தனியார், தொழில்துறை நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. பல தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் தங்களது வேலைகளை இழக்க நேரிட்டது. இதனால் பல குடும்பங்களில் பொருளாதார நெருக்கடிகளும் உருவானது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 3 கடைசி நாள்!!
இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் வேலையின்மையும், வேலை இழப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது. இதனிடையே கடந்த ஜூன் 2021ல் இந்த வேலை இழப்பு விகிதமானது குறைந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) தகவல் தெரிவித்துள்ளது. அதாவது கடந்த மே மாதத்தில், 11.9 சதவீதமாக இருந்த வேலை இழப்பு விகிதமானது ஜூன் மாதத்தில் 9.19 சதவீதமாக குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவித்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
கொரோனா பேரலைக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் தற்போது மீண்டு வருவதை தொடர்ந்து வேலையின்மை விகிதம் குறைந்து வருவதாக CMIE அறிக்கை தெரிவித்துள்ளது. என்றாலும் கூடிய விரைவில் வேலை இழப்பு விகிதம் 6 லிருந்து 7% ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் வேலை இழப்பு என்னும் சிக்கல், வேலையின்மை விகிதத்தில் குறைவாகவும், தொழிலாளர் பங்கேற்பு மற்றும் புதிய வேலைவாய்ப்பு விகிதத்தில் அதிகமாகவும் காணப்படுகிறது. மேலும் கொரோனா 2ஆம் அலையும் இதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் கூறுகிறது.