TNPSC பொது தமிழ் – உணவே மருந்து & நோய் தீர்க்கும் மூலிகைகள்

0

 உணவே மருந்து & நோய் தீர்க்கும் மூலிகைகள் 

இங்கு கொடுக்கப்பட்டுள்ள  உணவே மருந்து & நோய் தீர்க்கும் மூலிகைகள் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

உணவே மருந்து

  • மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது “உணவு”
  • உடல் நலத்தை தீர்மானிப்பவை உணவு, உணவுப்பழக்கம்.
  • தமிழர் மருத்துவத்தில் அனைத்து நோய்களையும் தீர்க்கும் சஞ்சீவி உணவாகும்
  • இன்று சத்துக்காக அன்றிச் சுவைக்காக உண்ணும் நடைமுறை மிகுந்துள்ளது.
  • அட்டைப்பெட்டி உணவு, தாள்பை உணவு, ஆயத்த உணவு, விரைவு உணவு முறைகளும் நோய்க்கு காரணம்.
  • “உண்டி முதற்றே உலகு உண்வெனப்
  • படுவது நிலத் தொடு நீரே” என்று புறநானூறு
  • “உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே” என்று புறநானூறும் மணிமேகலையும்
  • “பசிப்பிணி என்னும் பாவி” என்று மணிமேகலை
  • “பசி வந்திடப் பத்தும் பறந்து போம்” என்று ஒளவை ஆகியோர் உணவின் சிறப்புகளை கூறியுள்ளனர்.
  • பழக்க வழக்கம் நாகரிகம், சமூக அமைப்பு, வாழ்க்கைத் தரம் இவற்றை மாற்றும் வலிமை கொண்டது உணவு.
  • உடலையும் உயிரையும் வளர்க்கும் அமுது உணவு.
  • உடல் நலம் என்பது உயிர் உடலோடு கூடிய நிலையில் புறச்சூழலில் போராடி வெற்றி பெறுவதே ஆகும்.
  • திருக்குறளில் மருந்து என்ற அதிகாரம் உள்ளது.
  • பசித்த பின் புசித்தால் மருந்து வேண்டாம்.
  • இதனையே திருவள்ளுவர் 942 குறளின் மூலம்

“மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்” என்று கூறுகிறார்.

  • தமிழகத்தில் உணவு மருத்துவ முறையில் சமைக்கப்படுகிறது.
  • வெப்ப நாடான தமிழ்நாட்டிற்கு – புழுங்கல் அரிசி ஏற்றது.
  • மஞ்சள் – மார்புச் சளியை நீக்கும்
  • கொத்தமல்லி – பித்தத்தைப் போக்கும்
  • சீரகம் – வயிற்றுச் கூட்டைத் தணிக்கும்.
  • மிளகு – தொண்டைக்கட்டை நீக்கும்.
  • பூண்டு – வலி அகற்றும் பசியைத் தூண்டும்.
  • வெங்காயம் – குளிர்ச்சி தந்து குருதியை தூய்மைப்படுத்தும்
  • பெருங்காயம் – வலியை அகற்றும்
  • இஞ்சி – பித்தத்தை அடக்கிக் காய்ச்சலைக் குணப்படுத்தும்.
  • தேங்காய் – நீர்க்கோவையை நீக்கும்
  • கறிவேப்பிலை – மணம் ஊட்டும், உணவின் மீது விருப்பத்தைத் தூண்டும், வி~க்கடி, சீதபேதி நீங்க
  • நல்லெண்ணெய் – கண்ணுக்கு குளிர்ச்சி, தந்து அறிவுத் தெளிவைத் தரும்.
  • சீரகம் பூண்டு கலந்த மிளகு நீர் – சூட்டைத் தணித்து செரிமானத்தை அதிகரிக்கும்.
  • எலுமிச்சை – சூடு, பித்தம் நீக்க
  • கீரை – கழிவு அகற்ற, வலிவு கூட்ட
  • பனங்கற்கண்டு – சூடு தணிக்கும்.
  • உடம்பு ஒவ்வாத உணவுகளை உண்ணக் கூடாது என்று வள்ளுவர் 945 குறளில் வலியுறுத்தியுள்ளார்.
  • மாறுபாடு இல்லாத உண்டி மறத்துண்ணின்
  • ஊறுபாடு இல்லை உயிர்க்கு என்றும்.

 உணவில் தவிர்க்க வேண்டியவை

  • நோய்க்கு முதற்காரணம் உப்பு
  • உப்பு நிறைந்த பொருள்கள்
  • ஊறுகாய், அப்பளம், வடகம், கருவாடு, முந்திரிப்பருப்பு, வறுத்த உருளைக் கிழங்குச் சீவல், வாழைக்காய்ச் சீவல், புளித்த மோர்.
  • கொழுப்பு நிறைந்த பொருள்கள்
  • கொழுப்பு நிறைந்த இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு, நெய், வெண்ணெய், தயிர், பாலாடை, பனிக்கூழ் (ஐஸ்கிரீம்), இனிப்புக் கட்டி (சுவீட்),
  • காரமும் புளிப்பும் கொண்ட உணவுகள் கூடா.
  • எண்ணெய் வறுத்த பொரித்த உணவுகள்
  • நொறுக்குத் தீனி வயிற்றுக்குக் கேடு என்ற பழமொழி உள்ளது.

உண்ணும் முறை

  • எளிதில் செரிக்க கூடிய உணவுப்பொருளை குடல் ஏற்றுக் கொள்கிறது. எ.கா: பழம், காய், அரிசி, கோதுமை, பால்
  • உணவை விரைவாக விழுங்கக் கூடாது.
  • உமிழ்நீர் உணவுடன் கலக்கும்படி மென்று விழுங்க வேண்டும்.
  • நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.
  • உமிழ்நீர்; கலக்காத உணவு செரிக்க அதாவது அதன் சத்து உடலில் எதுவும் சேராது.
  • காய்கறிகளை முக்கால் வேக்காட்டில் வேக வைக்க வேண்டும்.
  • காய்கறி வேகவைத்த நீரை உணவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தண்ணீரும் மருந்தே

  • “நீரின்றி அமையாது உலகு” என்பது திருவள்ளுவர் தனது 20 குறளில் கூறியுள்ளார்.
  • உணவுப்பொருளை உற்பத்தி செய்வதற்கும் உணவுப் பொருளை தூய்மைப்படுத்துவதற்கும் உணவைச் சமைப்பதற்கும், சமைத்த உணவை உண்பதற்கும் தானே உணவாகவும் அமைவது நீர்.
  • உணவு உண்ணும் போது இடையில் நீர் அருந்துதல் கூடாது.
  • நாளொன்றுக்கு குறைந்தது மூன்று லிட்டர் அளவு நீர் குடிக்க வேண்டும்.

தமிழரின் பரம்பரை உணவுகள்

  • கம்பு:  புரதம் மிகுதி, ஆற்றலுக்கும் வளர்ச்சிக்கும்
  • சோளம்: உயிர்ச்சத்து ‘ஏ’ (கண் பார்வை) புரதம் வளர்ச்சிக்கு
  • கேழ்வரகு: புரதம், உடல் உறுதி, வளர்ச்சி
  • பயறு வகைகள் (முளை கட்டியவை): புரதம், உயிர்ச்சத்துக்கள், அமினோ அமிலங்கள், இரும்பு, தாதுப் பொருட்கள்
  • கீரைகள்: இரும்புச் சத்து (இரத்த சோகைக்கு) தாது உப்புகள்
  • உளுந்து: உடல் உறுதி
  • வெந்தயம்: குளிர்ச்சி

சமச்சீர் உணவு

  • புரதம், கொழுப்பு, மாவு, கனிமங்கள், நுண்ணூட்டச் சத்துகள் சேர்ந்தது சமச்சீர் உணவு
  • முக்கால் வயிறுதான் நிறைய வேண்டும்.
  • சோறு, காய்கறி – ½ வயிறு
  • பால், மோர், நீர் – ¼ வயிறு
  • வெற்றிடம் – ¼ வயிறு
  • வயிறு புடைக்க உண்பது நோய்க்கு இடமளிக்கும்.
  • மீதூண் விரும் பேல் என்று ஒளவை கூறியுள்ளார்.
  • அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று பழமொழிகள் உள்ளது.
  • வயது அதிகமானால் கொழுப்பை குறைக்க வேண்டும்.
  • நடைபயிற்சியே எளிய உடற்பயிற்சி
  • நாள்தோறும் நடந்தால் நம்மை விட்டு நோய் நடக்கும். ஓடினால் நோய் ஓடும், படுத்தால் உடன் படுத்துக் கொள்ளும்.
  • காலை மாலை உலாவி நிதம்
  • காற்று வாங்கி வருவோரின்
  • காலை தொட்டுக் கும்பிட்டு
  • காலன் ஓடிப் போவானே
  • என்று கவிமணி தன்னுடைய பாடல்களில் கூறியுள்ளர்.
  • “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
  • திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
  • உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
  • உடம்பை வளர்த்தேன் உயிர்வளத் தேனே” என்னும் திருமூலர் தம்முடைய பாடல்கள் மூலம் கூறியுள்ளார்.

அறுசுவையின் பயன்கள்

  • இனிப்பு – வளம்
  • கார்ப்பு – உணர்வு
  • துவர்ப்பு – ஆற்றல்
  • உவர்ப்பு – தெளிவு
  • கைப்பு – மென்மை
  • புளிப்பு – இனிமை

நோய் தீர்க்கும் மூலிகைகள்

  • மூலிகை எல்லா விதமான நோய்களையும் நீக்கும். பின்விளைவுகளை ஏற்படுத்தாது.

துளசி

  • இதன் இலைகளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் மார்பு சளி, நீர்க் கோவை, தலைவலி நீங்கும்.
  • இலைகளை எலுமிச்சைச் சாருடன் அரைத்துப் போட்டால் படை நீங்கும்.
  • விதைகளை பொடி செய்து 1 (அ) 2 கிராம் உண்டால் உடல் சூடு, நீர் எரிச்சல் அடங்கும்.

கீழக்காய் நெல்லி (கீழா நெல்லி)

  • கீழா நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற பெயரும் உண்டு.
  • மஞ்சள் காமாலைக்குக் கைகண்ட மருந்து.
  • காயுடன் கூடிய கீழாநெல்லிச் செடியை நீரில் சுத்தம் செய்து அரைத்து விழுதாக்கி 50 கிராம் விழுதை 200 மில்லி எருமைத் தயிருடன் சேர்த்து காலை ஆறுமணி அளவில் 3 நாளைக்கு தவறாமல் உண்ண வேண்டும்.
  • மருந்துண்ணுதட நாளில் மோரும், மோர்ச் சோறும் உண்பது நல்லது.
  • கீழா நெல்லி இலைகளைக் கற்கண்டுடன் சேர்த்த அரைத்து மூன்று கிராம் அளவு காலை, மாலையில் நான்கு நாள் தொடர்ந்து சாப்பிட சிறுநீர்த் தொடர்பபான நோய் நீங்கும்.

தூதுவளை

  • கொடி வகையைச் சேர்ந்த மூலிகை ஆகும்.
  • இலைகளிலும் கொக்கி போன்ற முள் இருக்கும்.
  • சிங்க வல்லி என்ற பெயரும் உண்டு
  • இதனை ஞானப்பச்சிலை என்றவர் வள்ளலார்.
  • நல்லெண்ணெயில் சமைத்து இதன் இலைகளை உணவோடு சேர்த்து 21 நாட்கள் உண்டால் சுவாசகாசம் (டி.பி.) நீங்கும்.
  • இதன் இலை குரல் வளத்தை மேம்படுத்தும், இளைப்பு இருமல் நீங்கும்.
  • வாழ்நாளை நீட்டிக்கும்.

 குப்பைமேனி

  • பூச்சி கடித்து தோலில் தடிப்பு ஏற்பட்டால் அரைத்து பூச வேண்டும்.
  • இலைகளைக் காயவைத்து பொடியாக்கிப் பூசினால் படுக்கைப் புண் குணமாகும்.
  • வயதிற்கேற்ற அளவில் உண்ணக் கொடுத்தால் மலப்புழுக்கள் வெளியேறும்.
  • வயிறு தூய்மையாகும், பசியெடுக்கும்.
  • இலையுடன் மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசினால் சொறி, சிரங்கு நீங்கும்.
  • “மேனி துலங்க குப்பை மேனி”
  • என்ற பழமொழி உள்ளது.

கற்றாழை

  • கற்றாழையில் சோற்றுக் கற்றாழை மருந்தாகப் பயன்படுகிறது.
  • இதன் தோலை நீக்கிச் சோற்றுப் பகுதியை எடுத்து பத்து முறை கழுவினால் தான் கசப்பு நீங்கும்.
  • மஞ்சளுடன் சேர்த்து காயத்திற்குப் போட்டால் காயம் ஆறும்.
  • பசும்பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூடு குறையும்.
  • கற்றாழைக்குக் குமரி என்ற பெயரும் உண்டு.
  • பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்கும்.
  • “குமரிகண்ட நோய்க்கு குமரிக் கொடு” என்ற பழமொழி ஆகும்.

முருங்கை

  • முருங்கைப் பட்டையை அரைத்துத் தடவினால் முறிந்த எலும்பு விரைவில் கூடும். வீக்கம் வற்றும்.
  • முருங்கை கண்பார்வையை ஒழுங்குபடுத்தும்.
  • உடலை வலுவாக்கும்
  • இரும்பு சத்து மிகுந்தது.
  • கூந்தலை வளர்க்கும்.

கறிவேப்பிலை

  • மண் சட்டியில் 300 மில்லி பசும்பாலை விட்டு வேடுகட்டி அதன் மீது காம்பு நீக்கிய கறிவேப்பிலையைக் கொழுந்தைப் போட்டு சிறுதீயில் அவிக்க வேண்டும். அதனை வி~க்கடி இடத்தில் வைத்துக் கட்டினால் மூன்று நாளில் குணமாகும்.
  • வேடு கட்டுதல் – சட்டியின் வாயை மெல்லிய துணியால் மூடிக் கட்டுதல்.
  • காலை மாலை இருவேளையில் 5 கிராம் கருவேப்பிலையைக் கழுவிச் சிறிது சிறிதாக வாயில் போட்டு மென்று விழுங்கினால் இரண்டு நாளில் சீதபேதி குறையும்.
  • உணவில் சேரும் சிறு நச்சுக்களை நீக்கும்.

 கரிசலாங்கண்ணி

  • இதன் வேறு பெயர்கள் பிருங்கராசம், தேகராசம், கரிசாலை, கையாந்தகரை.
  • இவை நரை போக்கும், இரத்த சோகை தீர்க்கும், செரிமானக் கோளாறு அகற்றும், கண்பார்வை கூராகும். மஞ்சள் காமாலை நோய்க்கு பயன்படுகிறது.

பிற மூலிகைகள்

மணத்தக்காளிக்கீரை:

  • வாய்ப்புண், குடற்புண்ணைக் குணமாக்கும், இருமல் நீக்கும்.

முசுமுசுக்கை:

  • வேரினை பசும் பாலில் ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி பசும்பால், மிளகுப் பொடி, சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டால் இருமல் நீங்கும்.

அகத்திக் கீரை:

  • பல் சார்ந்த நோய்களை நீக்கும்

வல்லாரைக் கீரை:

  • நினைவாற்றலைப் பெருக்கும்
  • சித்தர்கள் இதை சரஸ்வதி என்பர்.

வேப்பங்கொழுந்து:

  • காலையில் சாப்பிட்டால் மார்பு சளி நீங்கும்.

வெள்ளைப் பூண்டு:

  • ஆஸ்துமா அகற்றும்

முடக்கற்றான்:

  • இவை மூட்டு வலி நீக்கும்

அகத்தி:

  • இவை பல் நோய் குணமாக்கும்

அருகம்புல் சாறு

  • இரத்தத்தைச் சுத்திகரிக்கும்

PDF Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!