உக்ரைனில் 198 அப்பாவி மக்கள் பலி – 3,500 ரஷ்ய மக்களை கொன்று பழிக்கு பழிவாங்கிய உக்ரைன் வீரர்கள்!

0
உக்ரைனில் 198 அப்பாவி மக்கள் பலி - 3,500 ரஷ்ய மக்களை கொன்று பழிக்கு பழிவாங்கிய உக்ரைன் வீரர்கள்!
உக்ரைனில் 198 அப்பாவி மக்கள் பலி - 3,500 ரஷ்ய மக்களை கொன்று பழிக்கு பழிவாங்கிய உக்ரைன் வீரர்கள்!
உக்ரைனில் 198 அப்பாவி மக்கள் பலி – 3,500 ரஷ்ய மக்களை கொன்று பழிக்கு பழிவாங்கிய உக்ரைன் வீரர்கள்!

இந்த ரஷ்ய மற்றும் உக்ரைன் போராட்டத்தில் பல உயிர்கள் காவு வாங்கப்பட்டு வருகிறது. ரஷ்ய படையினர் 198 அப்பாவி மக்களை கொன்ற நிலையில், உக்ரைன் 3,500 ரஷ்ய மக்களை கொன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

பலியாகும் உயிர்கள் :

உக்ரைனில் இன்றுடன் மூன்றாவது நாளாக ரஷ்யா வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் உக்ரைன் நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவ தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகள் என அனைத்தின் மீதும் தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும் ரஷ்யா மெலிட்டோபோல் நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் உக்ரைன் தலைநகரான கிவ்வில் அமைந்துள்ள நீர் அணுமின் நிலையங்களையும் ரஷ்யா கைப்பற்றிவிட்டது.

தமிழக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு? வலுக்கும் கோரிக்கை!

மேலும் உக்ரைனில் உள்ள 211 இராணுவ உள்கட்டமைப்புகள் மற்றும் 8 கடற்படை கப்பல்கள் என அனைத்தையும் ரஷ்யா சேதப்படுத்திவிட்டது. உக்ரைனில் வான்வெளி அனைத்தையும் ரஷ்யா சேதப்படுத்தியதால் உக்ரைன் தனது வான்வழியை மூடியுள்ளது. இதனால் உக்ரைனில் இருந்து மக்கள் தங்களது தாய்நாட்டுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி மற்றும் ருமேனியா நாடுகளின் எல்லை வழியாக இந்தியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.

Post Office இல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022- முழு விவரங்கள் இதோ!

இந்த ரஷிய தாக்குதலில் 198 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர். இதனிடையே உக்ரைன் இதுவரை 3,500க்கும் மேற்பட்ட ரஷிய படையினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் தன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், 102 டாங்கிகள், 536 கவச போர் வாகனங்கள், 8 ஹெலிகாப்டர்கள், 14 விமானங்கள் மற்றும் 20 க்ரூஸ் ஏவுகணைகளை அழித்துள்ளதாகவும் உக்ரைன் பகீர் தகவலை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here