உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – ரஷிய அதிபர் உறுதி!!!

0
உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் - ரஷிய அதிபர் உறுதி!!!
உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் - ரஷிய அதிபர் உறுதி!!!
உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – ரஷிய அதிபர் உறுதி!!!

உக்ரைன் பாதிப்பில் சிக்கி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தவித்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கூறி ரஷ்ய அதிபரிடம் மோடி கேட்டபோது, ரஷ்ய அதிபரும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார்.

இந்தியர்களின் பாதுகாப்பு:

நேட்டோ அமைப்பில் உக்ரைன் நுழைய முயற்சித்ததால் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகரான கிவ் உள்பட பல நகரங்களில் ரஷ்யா குண்டு வீசி தாக்குதலை தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கிறது. மேலும் உக்ரைன் நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவ தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகள் அனைத்தையுமே குறிவைத்து ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் முன்வந்துள்ளனர்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் செயலியின் அம்சங்கள்!

உக்ரைனில் வசித்து வரும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தை தேடி ஓட ஆரம்பித்துவிட்டனர். இந்த நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டு பயணிகள் அனைவரும் பாதுகாப்பு கருதி சொந்த நாட்டுக்கு திரும்பி வருகின்றனர். கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்புடன் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஒன்றிய அரசு செய்து வருகிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் வீடு திரும்புவதற்கான அனைத்து செலவையும் தமிழக அரசே பொறுப்பு ஏர்த்துள்ளது.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய அரசாணை வெளியீடு!

இந்தியாவுடன் ரஷ்யா சுமூகமான முறையில் தான் இருந்து வருகிறது. இதனால் பிரதமர் மோடி ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதினை தொடர்பு கொண்டு பேசினால் இந்த போரை முடிக்க வாய்ப்புள்ளது என உக்ரைன் தூதரக தலைவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் மோடி புதினிடம் பேசிய போது இந்தியர்களின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. அனைத்து இந்தியர்களின் பாதுகாப்புக்கும் உறுதி அளித்துள்ளார். இதனால் மோடி ரஷ்ய அதிபரிடம் நன்றி தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here