தமிழகத்தில் மீண்டும் LKG, UKG வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? தொடக்க கல்வி இயக்குநரகம் விளக்கம்!

0
தமிழகத்தில் மீண்டும் LKG, UKG வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? தொடக்க கல்வி இயக்குநரகம் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் LKG, UKG வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? தொடக்க கல்வி இயக்குநரகம் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் LKG, UKG வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? தொடக்க கல்வி இயக்குநரகம் விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து நேற்று LKG , UKG வகுப்புகள் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் LKG , UKG வகுப்புகள் மூடப்படும் என்ற செய்தி பரவி வருகிறது. இதற்கு தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது.

பள்ளி திறப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்டவை நீக்கப்பட்டது. அத்துடன் மீண்டும் கடந்த 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அத்துடன் கல்லூரி மாணவர்களுக்கும் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

JEE தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – மெயின் தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு!

இதனை தொடர்ந்து இந்த தளர்வுகள் அனைத்தும் கடந்த 15ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் கடந்த 16ம் தேதி முதல் புதிய தளர்வுகளை வழங்க தமிழக முதல்வர் ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் முடிவில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் தெரிவித்தாவது, திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு 200 பேருக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த LKG , UKG வகுப்புகள், மழலையர் விளையாட்டுப் பள்ளிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலி அறிமுகம்!

அதன்படி தற்போது கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நடைபெற்று வருகிறது. மேலும் 2 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இந்த நிலையில் LKG , UKG வகுப்புகள் மீண்டும் மூடப்படும் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வந்தது. இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்ததாவது, தமிழகத்தில் LKG , UKG வகுப்புகள் மூடப்படும் என்ற செய்தி தவறானது என்றும் அத்துடன் அங்கன்வாடிகளில் மாணவர்களை சேர்க்கையை விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!