பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா 2.0 திட்டம் – விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ!

0
பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா 2.0 திட்டம் - விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ!
பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா 2.0 திட்டம் - விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ!
பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா 2.0 திட்டம் – விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் உஜ்வாலா 2.0 திட்டத்திம் மூலம் பெண்களுக்கு இலவசமாக கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் எவ்வாறு சேருவது? நிபந்தனைகள் என்னென்ன? என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

உஜ்வாலா திட்டம்:

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருப்பதால் இதன் விலை அதிகரிப்பு அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்புக்குள்ளாகிறது. தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை 1000 ரூபாயை கடந்துள்ளது. இந்த நிலையில் சிலிண்டருக்கான மானியத் தொகையும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவது இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் வேலையை எளிமையாக்க அனைவருமே கேஸ் சிலிண்டர் அடுப்பு தான் பயன்படுத்துகின்றனர்.

Post Office இன் மாதாந்திர சேமிப்பு திட்டம் – 6.6% வரை வட்டி! முழு விபரம் இதோ!

இன்னும் சில கிராமப்புறங்களில் மக்கள் கேஸ் அடுப்பிற்கு உபயோகப்படுத்துவதில்லை. அதனால் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்குவதற்காக உஜ்வாலா 2.0 என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவசமாக இலவசமாக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கப்படுகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். உஜ்வாலா திட்டத்தில் கேஸ் அடுப்பு வாங்குவதற்கு வட்டியில்லா கடன் தொகையும், இலவச சிலிண்டருக்கு கிடைக்கும். 18 வயது பூர்த்தி முடிந்த பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் வேறு யாருக்கும் LPG இணைப்பு இருக்க கூடாது என்பது நிபந்தனையாகும்.

உஜ்வாலா 2.0 திட்டத்தில் சேர விண்ணப்பிக்கும் முறைகள்:
  •  www.pmuy.gov.in என்ற இணையத்தில் உஜ்வாலா 2.0 திட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • விண்ணப்ப படிவத்தில் கேட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். (பெயர், முகவரி, ஜன்தன் கணக்கு விவரம், ஆதார் எண், ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும்)
  • அடுத்ததாக அடையாள ஆவணமாக (ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு பொதுத்துறை LPG நிறுவனங்கள் மூலம் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here