கல்லூரி & பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு சூப்பரான திட்டம் – UGC பரிந்துரை!!

0
கல்லூரி & பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு சூப்பரான திட்டம் - UGC பரிந்துரை!!
கல்லூரி & பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு சூப்பரான திட்டம் - UGC பரிந்துரை!!
கல்லூரி & பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு சூப்பரான திட்டம் – UGC பரிந்துரை!!

நாட்டில் மற்ற கல்லூரிகளில் இருக்கும் நூலகங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட வளங்களை பிற கல்லூரி மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கும் திட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை பார்ப்போம்.

பல்கலைக்கழக மானியக்குழு

நாடு முழுவதும் இருக்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கிட பல்கலைக்கழக மானியக்குழு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, மற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருக்கும் நூலகங்கள், ஆய்வகங்கள் மற்றும் பிற வளங்களை பிற கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கும் திட்டத்தை UGC பரிந்துரை செய்துள்ளது.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரம் – முதல்வர் நேரில் சென்று ஆய்வு!

மேலும் இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் கூறியதாவது, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருக்கும் வளங்களை மற்ற மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தை, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அல்லது பிற உயர் கல்வி நிறுவனங்களின் ஒப்புதலுடன் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கான பராமரிப்பு செலவை UGC ஏற்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

இத்திட்டத்தின் கீழ் மற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளின் நூலகங்களுக்கு சென்று படிப்பது, ஆய்வகங்களுக்குச் சென்று ஆராய்ச்சி செய்வது உள்ளிட்டவைகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் முதுகலை மற்றும் Ph.D படிக்கும் மாணவர்கள் மற்ற கல்வி நிறுவனங்களின் வளங்களை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!