அக்டோபர் 6 முதல் UGC நெட் 2021 தேர்வுகள் – விண்ணப்ப பதிவு தொடக்கம்!

0
அக்டோபர் 6 முதல் UGC நெட் 2021 தேர்வுகள் - விண்ணப்ப பதிவு தொடக்கம்!
அக்டோபர் 6 முதல் UGC நெட் 2021 தேர்வுகள் - விண்ணப்ப பதிவு தொடக்கம்!
அக்டோபர் 6 முதல் UGC நெட் 2021 தேர்வுகள் – விண்ணப்ப பதிவு தொடக்கம்!

UGC NET 2021 தேர்வு வரும் அக்டோபர் 6ம் தேதி ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்றும், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தேசிய தேர்வு முகமையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

UGC NET 2021 தேர்வு:

கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த காரணத்தால் கடந்த ஆண்டு தேசிய தேர்வு முகமை 2020 டிசம்பர் பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதி தேர்வை தள்ளி வைத்தது. முன்னதாக இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 2 முதல் மார்ச் 2 முதல் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு காரணமாக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் 2021 யுஜிசி-நெட் தேர்வு மற்றும் டிசம்பர் 2020 யுஜிசி-நெட் தேர்வு இரண்டையும் ஒன்றாக நடத்த என்டிஏ முடிவு செய்துள்ளது.

அரசு மருத்துவமனை மருந்தாளுநர் காலிப்பணியிடங்கள் – அரசுக்கு கோரிக்கை!

அதன்படி, தேர்வுகள் அக்டோபர் 6ம் தேதி ஆன்லைன் முறையில் இரண்டு ஷிப்டுகளில் நடைபெறும். முதல் தேர்வு காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், இரண்டாவது தேர்வு மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடைபெறும். டிசம்பர் 2020 UGC-NET க்கு பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்து அனுப்பலாம். UGC NET 2021 தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 5ம் தேதி வரை ugcnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி செப்டம்பர் 6 ஆகும். விண்ணப்பங்களை செப்டம்பர் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை திருத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

UGC-NET 2021 விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் NTA இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில், UGC NET 2021 விண்ணப்பிக்கும் இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது, தேவையான சான்றுகளை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும்.
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும்.
  • உங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை குறித்துக்கொள்ள வேண்டும். அதை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.
விண்ணப்பத்தை பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்:
  1. பல்கலைக்கழக சான்றிதழ்
  2. அடையாள அட்டை
  3. பட்டப்படிப்பு சான்றிதழ்
  4. EWS சான்றிதழ்
  5. PwD சான்றிதழ்
  6. பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்
  7. விண்ணப்பதாரரின் கையொப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!