UGC NET தேர்விற்கான கால அட்டவணை வெளியீடு – முக்கிய அறிவிப்பு!

0
UGC NET தேர்விற்கான கால அட்டவணை வெளியீடு - முக்கிய அறிவிப்பு!
UGC NET தேர்விற்கான கால அட்டவணை வெளியீடு - முக்கிய அறிவிப்பு!
UGC NET தேர்விற்கான கால அட்டவணை வெளியீடு – முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் கல்லூரி பேராசிரியர்களுக்கு தேசிய தேர்வு முகமையானது நெட் எனப்படும் தேர்வை நடத்தி வருகிறது. தற்போது 2022ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை NTA வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் இதனை தெரிந்து தேர்விற்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேர்வு அட்டவணை:

இந்தியாவில் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த நெட் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக நியமனம் பெறுவதற்குத் தகுதி பெறுகின்றனர். இந்த தேர்வு 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் பொது அறிவு குறித்த 50 வினாக்கள் இடம்பெறும். அதே போல 2ம் தாளில் பாடம் சார்ந்த 100 கேள்வி கடந்த வருடம் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது பாதிப்புகள் குறைந்து அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கி வருவதால் இந்த வருடம் யுஜிசி – நெட் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

Exams Daily Mobile App Download

கடந்த மே மாதம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. முதுநிலை படித்த மாணவர்களுக்கு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் முதுநிலை கல்வியோடு தொடர்புடைய பாடப் பிரிவை நெட் தேர்வர்கள் தேர்தெடுத்து விண்ணப்பிப்பது அவசியம். இந்த யுஜிசி நெட் தேர்வு கணினி அடிப்படையிலான முறையில் நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை (NAT) தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு NTA 2021 டிசம்பர் மற்றும் 2022 ஜூன் ஆகிய 2 வருட தேர்வுகளை ஒருங்கே நடத்த உள்ளது. இந்த நிலையில் இன்று யுஜிசி –நெட் தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அரசியல் அறிவு, மராத்தி, தெலுங்கு, சீனம் உள்ளிட்ட 25 பாடநெறிகளுக்கு ஜூலை 7ம் தேதியும், பாதுகாப்புத் துறை, இந்து, உடற்பயிற்சி உள்ளிட்ட 4 பாட நெறிகளுக்கு ஜூலை 11ம் தேதி தேர்வு நடைபெறும்.

IDBI வங்கியில் MBA / M.Phil / Ph.D முடித்தவர்களுக்கு வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

அதே போல வீட்டு அறிவியல், மனித உரிமைகள், உளவியல், நேபாளி  உள்ளிட்ட பாட நெறிகளுக்கு ஜுலை 12ம் தேதியும் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தேர்வுக்கூட அனுமதி சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனை https://ugcnet.nta.nic.in/  என்ற இணையதளம் வாயிலாக தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த அனுமதி சீட்டில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையம் அவை அமைந்துள்ள நகரம் போன்ற முக்கிய தகவல்களை அறியலாம். மேலும் தேர்வு கால அட்டவணை மற்ற கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!