UGC NET தேர்வுகளின் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு – பல்கலைக்கழக மானியக் குழு வெளியீடு!

0

UGC NET தேர்வுகளின் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு – பல்கலைக்கழக மானியக் குழு வெளியீடு!

ஒவ்வொரு ஆண்டும் UGC NET தேர்வு பல்கலைக்கழக மானியக் குழு சார்பாக தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பார்ப்போம்.

தேர்வர்கள் கவனத்திற்கு

இந்தியாவில் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக பணியாற்றுவதற்கு NET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக கிடைக்கும் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உயர்கல்வி துறைகளில் ஆய்வு மேற்கொள்ள மாணவர்களுக்கு இத்தேர்வின் மூலமாக இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை சான்றிதழையும் பெற முடியும். இதற்கு இத்தேர்வு மூலமாக கிடைக்கும் சான்றிதழ் 3 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உங்களுக்கு பிடிச்சாதான் நாங்க இங்க இருக்கவே முடியும்’ – பதிலடி கொடுத்த சிவாங்கி! வைரலாகும் பதிவு!

ஒவ்வொரு ஆண்டும் UGC NET தேர்வு பல்கலைக்கழக மானியக் குழு சார்பாக தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இத்தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது. இதன் முதல் தாளில் பொது அறிவு பாடப்பகுதியில் இருந்து 50 கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வின் காலம் ஒரு மணி நேரமாகும். இதையடுத்து 2ம் தாளில் பாடம் சார்ந்த 100 கேள்விகள் கேட்கப்படுகிறது. இது விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களிலிருந்து கேட்கப்படும். இத்தேர்வுக்கு 2 மணி நேர கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விண்ணப்பதாரர் தங்களின் முதுநிலை பட்டப்படிப்புக்கு தொடர்புடைய பாடப் பிரிவை நெட் தேர்வுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இத்தேர்வு குறித்த தேதிகளை பற்றி பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. அதன்படி 2021 டிசம்பர் மற்றும் 2022 ஜூன் ஆகிய 2 அமர்வுகளை ஒருங்கிணைத்து ஜூலை மாதம் 8, 9, 11, 12 ஆகிய தேதிகளிலும் மற்றும் ஆகஸ்ட் மாதம் 12, 13, 14 ஆகிய தேதிகளில் கணினி வழியில் தேர்வு நடத்தப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுக்கான கால அட்டவணை http://nta.ac.in மற்றும் https://ugcnet.nta.nic இணையதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!