UGC-NET Exam 2021 தேர்வுக்கான அறிவிப்பு – மார்ச் 2 ஆம் தேதி கடைசி நாள்!!

0
UGC-NET EXAM 2021 தேர்வுக்கான அறிவிப்பு - மார்ச் 2 ஆம் தேதி கடைசி நாள்!!
UGC-NET EXAM 2021 தேர்வுக்கான அறிவிப்பு - மார்ச் 2 ஆம் தேதி கடைசி நாள்!!
UGC-NET Exam 2021 தேர்வுக்கான அறிவிப்பு – மார்ச் 2 ஆம் தேதி கடைசி நாள்!!

தேசிய தேர்வாணையத்தால் நடத்தப்படும் UGC-NET EXAM 2021 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான கடைசி தேதி மார்ச் 2 ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UGC-NET EXAM 2021 தேர்வு:

இந்திய அரசின் மனிதவள துறையின் கீழ் செயல்படும் தேசிய தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் UGC-NET EXAM 2021 தேர்வுகள் எழுத கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளவர்கள் மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்காக இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

TN Job “FB  Group” Join Now

இந்த தேர்வுகள் எழுத விருப்பமுள்ளவர்கள் கல்வித்தகுதியாக கலை, அறிவியல், மேலாண்மையியல், பொருளாதாரம், மானுடவியல் போன்ற துறைகளில் 55% மதிப்பெண்ணுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த தேர்வுக்கான கூடுதல் பிரிவுகள் பற்றி தெரிந்து கொள்ள இணையதளத்தை பார்வையிடலாம். இந்த தேர்வுகள் எழுத நடைபெறும் தேதிக்கு முன் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

கேட் நுழைவு தேர்வுக்கான விடைத்தாள்கள் வெளியீடு – தவறுகள் திருத்த மார்ச் 18 கடைசி நாள்!!

மேலும் SC, ST, OBC பிரிவை சேர்ந்தவர்கள் 50% மதிப்பெண் பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த தேர்வுகளுக்கான வயது வரம்பாக Net தேர்வு எழுதி கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர்களுக்கு இந்த தேர்வில் வயது வரம்பு இல்லை. மேலும் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 31 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், அதில் SC,ST,OBC & PWD பிரிவினருக்கு 5 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பள்ளிகளை இணைக்கும் நடைமுறையில் மாற்றம் – சி.பி.எஸ்.சி வாரியம்

தேர்வு முறைகள்:

இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்படுகின்றன. NET தேர்வுகள் இரண்டு தாள்களை கொண்டதாக உள்ளது. அதில் ஒரு தாளில் 100 மதிப்பெண்களுக்கு 50 வினாக்கள் கேட்கப்படும். விண்ணப்பதாரர்களின் கற்பிக்கும் திறனை சோதிக்கும் விதத்தில் இந்த தேர்வு கேள்விகள் இருக்கும். இந்த தேர்வுகள் 1 மணி நேரம் நடைபெறும். இரண்டாம் தாள் தேர்வுகள் 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் அதில் 100 வினாக்கள் இருக்கும் இந்த தேர்வு 2 மணி நேரம் நடத்தப்படும்.

தலைமை ஆசிரியர் பணிமாறுதல் எதிரொலி – மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்!!

இந்த தேர்வுகள் தமிழகத்தில், சென்னை, கோவை, கடலூர்,காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், விருதுநகர் போன்ற இடங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பக்கட்டணம் பொது பிரிவினருக்கு ரூ.1000 எனவும், OBC, EWS பிரிவினருக்கு ரூ.500 எனவும், SC,ST, PWD, trandgender போன்றோருக்கு ரூ.250 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு – வெளியான முடிவுகள்!!

இந்த தேர்வுக்கான தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளவர்கள் விண்ணப்பிக்க www.ntanet.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2021

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!