நாடு முழுவதும் அனைத்து முறைகளிலும் பெறும் பட்டங்களும் சமம் – யுஜிசி விளக்கம்!

0
நாடு முழுவதும் அனைத்து முறைகளிலும் பெறும் பட்டங்களும் சமம் - யுஜிசி விளக்கம்!
நாடு முழுவதும் அனைத்து முறைகளிலும் பெறும் பட்டங்களும் சமம் - யுஜிசி விளக்கம்!
நாடு முழுவதும் அனைத்து முறைகளிலும் பெறும் பட்டங்களும் சமம் – யுஜிசி விளக்கம்!

நாடு முழுவதும் மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், ஆன்லைன், தொலைதூர கல்வி, நேரடி கல்வி என அனைத்து முறைகளிலும் பெறும் பட்டங்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை என யுஜிசி விளக்கம் அளித்துள்ளது.

யுஜிசி விளக்கம்:

மத்திய அரசு சார்பில் புதிய கல்வி கொள்கை இளைய சமுதாயத்துக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்வித் துறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த புதிய கல்வி கொள்கையின் படி வருகிற 2035 ஆம் ஆண்டில் 50 சதிகவிகிதம் கூடுதல் மாணவர்கள் உயர்கல்வி படிக்கவும், உயர் கல்வி நிறுவனங்களில் 3.5 கோடி புதிய இடங்களை உருவாக்க வலியுறுத்தி வருகிறது.

அது மட்டுமில்லாமல் பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, பல் நுழைவு வெளியேறுதல் (Multiple Entry and Exit), விருப்பதெரிவு அடிப்படையிலான தரமதிப்பீடு அமைப்பு முறை (Choice based Credit System) போன்ற முன்னெடுப்புகளும் இந்த புதிய கல்வி கொள்கையில் அடங்கும். மேலும் உயர்கல்வியை மேம்படுத்த அனைத்து சூழலிலும் கல்வியை கை விடாமல் மாணவர்கள் தொடர்ந்து படிக்க முக்கிய கருவியாக திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி, இணையவழி கல்வி ஆகியவை இருக்கிறது.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ஆலோசனை – சிறப்பு குழு அமைப்பு!

அந்த வகையில் 2014 பாடநெறிகள் அங்கீகரித்தல் தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைக்கு உட்பட்டு வழங்கப்படும் திறந்தவெளி, ஆன்லைன், தொலைதூர கல்வி, நேரடி கல்வி என அனைத்து முறைகளிலும் பெறும் பட்டங்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை எனவும், அனைத்து டிகிரி பட்டங்களும் ஒரே மதிப்புடையது தான் என பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது. முதுநிலை படிப்புகளை பொறுத்த வரையில் மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட முதுநிலை படிப்புகள் சமமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!