தமிழ்நாட்டில் அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது – உயர்நீதிமன்றத்தில் யு.ஜி.சி. மீண்டும் திட்டவட்டம் !

0
தமிழ்நாட்டில் அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது - உயர்நீதிமன்றத்தில் யு.ஜி.சி. மீண்டும் திட்டவட்டம் !
தமிழ்நாட்டில் அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது - உயர்நீதிமன்றத்தில் யு.ஜி.சி. மீண்டும் திட்டவட்டம் !

தமிழ்நாட்டில் அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது – உயர்நீதிமன்றத்தில் யு.ஜி.சி. மீண்டும் திட்டவட்டம் !

தமிழ்நாட்டில் அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றத்தில் யு.ஜி.சி. மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் அரியர் வைத்திருக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

அரியர் தேர்வுகள் :

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. ஆயினும் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது.

ஆனால் அரியர் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணையினை வெளியிட்டது. இதனால் மாணவர்கள் பெற்றோர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தாலும் கல்வியாளர்கள், யுஜிசி போன்ற கல்வி வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.

யுஜிசி மீண்டும் திட்டவட்டம் !

இருப்பினும் சென்னை பல்கலைக்கழகம் போன்ற சில பல்கலைக்கழகங்கள் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கி விட்டது. இது குறித்தும் தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இவ்விரண்டு வழக்கிற்கும் வரும் நவம்பர் 20 அன்று விசாரணை நடத்தப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டபொழுது, “தமிழ்நாட்டில் அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது”, என உயர்நீதிமன்றத்தில் யு.ஜி.சி. மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், “அரியர் தேர்வை ரத்து செய்வது விதிகளுக்கு முரணானது, கல்லூரி மாணவர்களுக்கு இறுதிப்பருவத் தேர்வை நடத்தியே ஆக வேண்டும், முந்தைய தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் இறுதிப்பருவ மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க முடியாது”, என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!