தேசிய Fellowship வழங்க புதிய திட்டம் – UGC அறிவிப்பு!

0
தேசிய Fellowship வழங்க புதிய திட்டம் - UGC அறிவிப்பு!
தேசிய Fellowship வழங்க புதிய திட்டம் - UGC அறிவிப்பு!
தேசிய Fellowship வழங்க புதிய திட்டம் – UGC அறிவிப்பு!

ஏப்ரல் மாதத்தில் இருந்து நிலுவையில் வைக்கப்பட்டுள்ள NFPwD, NFSC, NFOBC என அனைத்து தேசிய பெல்லோஷிப்களை வழங்க யுஜிசி முடிவெடுத்துள்ளது. மேலும், இது குறித்தான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Fellowship:

ஏப்ரல் மாதத்தில் இருந்து நிலுவையில் வைக்கப்பட்டுள்ள சமூக நீதி, அதிகாரமளித்தல் மற்றும் சிறுபான்மையினர் விவகார அமைச்சகங்களின் தேசிய பெல்லோஷிப்களை வழங்க யுஜிசி முடிவெடுத்துள்ளது. அதாவது, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய பெல்லோஷிப் (NFPwD), பட்டியலிடப்பட்ட சாதிகளுக்கான தேசிய பெல்லோஷிப் (NFSC) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய பெல்லோஷிப் (NFOBC) ஆகியவற்றின் கீழ் உள்ளவர்களின் பெல்லோஷிப்கள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மௌலானா ஆசாத் தேசிய பெல்லோஷிப் திட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி நிலுவைத் தொகையை நிவர்த்தி செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகையை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, நிலுவையில் வைக்கப்பட்டுள்ள தேசிய பெல்லோஷிப்களை வழங்கும்படி அறிவிப்பு வெளியான நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரைக்கும் பெல்லோஷிப் வழங்க பல்கலைக்கழக மானியக் குழு முடிவெடுத்துள்ளது.

இந்திய ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – 130 ரயில்கள் ரத்து!

மேலும், கடந்த மார்ச் மாதத்தில் மத்தியத் துறை திட்டங்களுக்கான நிதிப் பாய்ச்சல் விதிமுறைகளை நிதி அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது. அதன்படி, M.Phil மற்றும் Ph.D படித்தவர்களுக்கான பெல்லோஷிப்களை தாங்களாகவே வழங்குமாறு அமைச்சகங்களுக்கு UGC அறிவுறுத்தியுள்ளது. மேலும், மத்திய நோடல் ஏஜென்சியை நியமிக்கலாம் அல்லது பயனாளிகளின் கணக்கிற்கே அமைச்சகம் நேரடியாக நிதியை மாற்றலாம் என UGC அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!