இனி 4 வருட இளங்கலை படிப்பிற்கு பிறகு PhD தொடர அனுமதி – UGC அறிவிப்பு!

0
இனி 4 வருட இளங்கலை படிப்பிற்கு பிறகு PhD தொடர அனுமதி - UGC அறிவிப்பு!
இனி 4 வருட இளங்கலை படிப்பிற்கு பிறகு PhD தொடர அனுமதி - UGC அறிவிப்பு!
இனி 4 வருட இளங்கலை படிப்பிற்கு பிறகு PhD தொடர அனுமதி – UGC அறிவிப்பு!

தற்போது நான்காண்டு இளங்கலை படிப்பில் (FYUP) குறைந்தபட்ச CGPA மதிப்பெண் 7.5/10 பெற்ற மாணவர்கள் தங்களது முதுநிலைப் படிப்பை முடிக்காமல் பிஎச்டி சேர்க்கைக்கு தகுதி பெறுவார்கள் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

PhD படிப்பு

இந்தியாவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் மட்டும் தான் PhD எனப்படும் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்வதற்கு தகுதியானவர்கள் என்ற நடைமுறை வழக்கத்தில் இருந்தது. ஆனால் இப்போது நான்காண்டு இளங்கலைப் படிப்பில் (FYUP) குறைந்தபட்ச CGPA மதிப்பெண் 7.5/10 பெற்ற மாணவர்கள் தங்களது முதுநிலைப் படிப்பை முடிக்காமல் பிஎச்டி சேர்க்கைக்கு தகுதி பெறுவார்கள் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிஎச்டி பட்டம் வழங்குவதற்காக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்ட புதிய விதிமுறைகளின்படி, குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் செயல்முறை விதிமுறைகள் ஜூன் மாத இறுதியில் அறிவிக்கப்பட்டு, வரவிருக்கும் 2022-23 கல்வி அமர்வில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில், தேசிய கல்விக் கொள்கையின் (NEP) கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட FYUPக்கு ஊக்கமளிக்கும் வகையில், 4 ஆண்டுகள் அல்லது 8 செமஸ்டர்களை கொண்ட இளங்கலைப் பட்டப்படிப்புக்கு பிறகு PhD சேர்க்கைக்கு கோரும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 7.5/10 CGPAஐ பெற்றிருக்க வேண்டும் என்று விதிமுறைகள் கூறுகின்றன. அதே நேரத்தில், SC, ST, OBC, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 0.5 CGPA மதிப்பெண் 10 என்ற அளவில் இருக்கும். இந்த மாற்றங்கள் குறித்து UGC தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் கூறுகையில், ‘எங்கள் உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி சூழலை மேம்படுத்துவதற்கு ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட நான்கு ஆண்டுகள் படித்த இளங்கலை மாணவர்களை PhD செய்ய ஊக்குவிப்பது முக்கியம்.

Airtel பயனர்கள் கவனத்திற்கு – ரூ.500க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!

அதனால்தான், 7.5/10 அல்லது அதற்கு மேல் CGPA பெற்ற நான்காண்டு UG மாணவர்களை PhD சேர்க்கைக்கு தகுதி பெற அனுமதிக்கிறோம். CGPA 7.5க்கும் குறைவாக உள்ளவர்கள் தகுதி பெற ஓராண்டு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது புதிய விதிமுறைகளின்படி, காலியாக உள்ள 40% இடங்களை பல்கலைக்கழக அளவிலான தேர்வுகள் மூலம் நிரப்ப முடியும் என்பது கவனிக்கத்தக்கது. மேலும், ஆராய்ச்சி படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளின் அடிப்படையில் 100% அல்லது தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழக நிலை அல்லது மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகளின் அடிப்படையில் 60-40 என்று இருக்கும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!