இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் 8700 காலிப்பணியிடங்கள் – இன்றே கடைசி நாள்!

0
இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் 8700 காலிப்பணியிடங்கள் - இன்றே கடைசி நாள்!
இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் 8700 காலிப்பணியிடங்கள் - இன்றே கடைசி நாள்!
இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் 8700 காலிப்பணியிடங்கள் – இன்றே கடைசி நாள்!

இந்தியாவில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப பல்வேறு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆசிரியர் வேலைவாய்ப்பு:

இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் இந்திய ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு மத்திய உயர்நிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தின்படி 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி அளிக்கப்படுகிறது. தற்போது இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இப்பணியில் சுமார் 8000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

IPL ரசிகர்களுக்கு ஷாக் அப்டேட் – இறுதி போட்டியிலிருந்து விலகும் இங்கிலாந்து டெஸ்ட் வீரர்கள்!

இப்பணிக்கு 29 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் வரை விண்ணப்பிக்க முடியும். ஆனால் 5 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், 5 ஆண்டுக்கு அதிகமாக பணி அனுபவம் பெற்றவராக இருந்தால் 57 வயது உட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். இதற்கு இளநிலை, முதுநிலை பட்டமும் அத்துடன் பி.எட் படிப்பும் முடித்தவராகவும் இருக்க வேண்டும். இளநிலை ஆசிரியர் பணிக்கு இளநிலை பட்டமும் மற்றும் பி.எட் படிப்பும் அத்துடன் மத்திய மாநில அரசால் நடத்தப்படும் CTET/TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆதார் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – PVC அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

இப்பணிக்கு Army Welfare Education Society நடத்தும் ஸ்கிரினீங் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மற்றும் கற்பிக்கும் திறன், கணினி பயன்படுத்தும் திறன் உள்ளிட்ட தேர்வு முறைகளின் மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் இதற்கு விண்ணப்பிக்க http://www.register.cbtexams.in/AWES/Registration என்ற என்ற இணையதள மூலமாக ஆன்லைன் முறையில் வருகிற 28ம் தேதிக்குள் விண்ணப்பித்து முடிக்க வேண்டும். இத்தேர்வு கட்டணமாக ரூ.385 செலுத்த வேண்டும். இதற்கான தேர்வு நுழைவுச் சீட்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பெற்று கொள்ளலாம்.

தற்போது இந்த நிறுவனத்தில் உள்ள பணியினை பற்றியும் மற்றும் காலிப்பணியிடங்களை பற்றியும் விரிவாக பார்க்கலாம்

நிறுவனம் : Army Welfare Education Society

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 8,700

பணியின் பெயர் : TGT(Trained Graduate Teachers), PGT (Post Graduate Teacher)

இப்பணிக்கான தேர்வுகள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் தேதி: 19.02.2022 மற்றும் 20.02.2022

தேர்வு நுழைவுச் சீட்டை 10.02.2022

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2022

தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: 28.02.2022

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!