மிகவும் கடினமான பணியாக ‘ஆசிரியர்’ பணி உள்ளது – யுசிஎல் ஆய்வில் தகவல்!!

0
மிகவும் கடினமான பணியாக ஆசிரியர் பணி உள்ளது- யுசிஎல் ஆய்வில் தகவல்!!
மிகவும் கடினமான பணியாக ஆசிரியர் பணி உள்ளது- யுசிஎல் ஆய்வில் தகவல்!!
மிகவும் கடினமான பணியாக ஆசிரியர் பணி உள்ளது- யுசிஎல் ஆய்வில் தகவல்!!

யுசிஎல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு முடிவின் படி பிற தொழில்களை விட ஆசிரியர் தொழில் மிகவும் கடினமான பணியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணி:

நாட்டின் மிக பெரிய பொறுப்பாக ஆசிரியர் பணி உள்ளது. நல்ல ஆசிரியர், தன்னுடைய சக்தியின் வாயிலாக நல்ல ஒழுக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த முடியும். தேசத்தை வடிவமைப்பவர், வரலாற்றை உருவாக்குபவர், தேச எல்லைகளைக் கடந்து உலக உணர்வை வளர்ப்பவர், நாகரிகத்தைப் பேணிக்காத்து அடுத்த தலைமுறைக்கு வழங்குபவர் போன்ற பல்வேறு பணிகளைச் செய்பவர் ஆசிரியர்.

‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்ற பழமொழிக்கு ஏற்ப சிறு குழந்தைகளை ஆரம்பத்திலிருந்தே நல்ல ஒழுக்கத்தையும் அவர்களது சிறப்பு திறனையும் மேம்படுத்தும் சிறப்பான பணியை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். யுசிஎல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின்படி, பிற தொழில்களை விட ஆசிரியர் பணி மிகவும் கடினமான பணியாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்த ஆசிரியர் பணி 54% இருந்தது. ஆனால் இப்போது உள்ள குழந்தைகளுக்கு திறனை வளர்க்க ஆசிரியர்கள் 94% பணி செய்ய வேண்டியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 197 தட்டச்சர் காலிப்பணியிடங்கள் – கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!

ஆசிரியர்களுக்கு அடுத்ததாக சுகாதார பணியாளர்களும், சட்ட வல்லுனர்களும் கடினமான பணி செய்வதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து யுசிஎல் இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷன் பல்கலைக்கழக பேராசிரியர் பிரான்சிஸ் கூறுகையில், “மிகவும் கடினமான பணியாக ஆசிரியர் பணி உள்ளது. அவ்வாறு செயல்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் அவர்களின் வாழ்வு தரம் அதிகரிக்காமல் உள்ளது. இன்றைய சமூகத்தில் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மதிப்புகள் இல்லாமல் உள்ளது.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2021 – மாநில அரசு வெளியீடு!!

எனவே சிறப்புமிக்க எதிர்காலத்தை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்களின் பிரச்சனையை களைவது ஒவ்வொரு குடிமகனின் கடமை ஆகும். கொரோனா காலத்திற்கு பிறகு அவர்களின் பணி சுமை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இந்த ஆய்வு முடிவுகள் ஆசிரியர்களுக்கு மட்டும் அல்லாமல், மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆசிரியர்கள் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள் என்று கூறுவோருக்கு பதிலாக, அவர்கள் குறைவான நேரம் வேலை செய்தாலும் கடினமான வேலை செய்வதாக கூறுகிறது இந்த ஆய்வு.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2021 – மாநில அரசு வெளியீடு!!

பள்ளி ஆசிரியர்கள் எந்த மாதிரி வேலை செய்கிறார்கள் என்பதை கணக்கிட 20 முதல் 60 வயது வரை உள்ள 857 ஆசிரியர்கள் அடங்கிய குழு ஆய்வில் கலந்து கொண்டது. இதில் அதிகப்படியான பெண் ஆசிரியர்கள் பங்கேற்றனர்” என்று அவர் குறிப்பிட்டார். இவ்வாறு பெருமை மிக்க ஆசிரியர்களை நல் மதிப்புடன் நடத்துவது அனைவரின் கடமை ஆகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!