U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி – இந்திய அணிக்கு அறிவுரை வழங்கிய விராட் கோஹ்லி! வைரலாகும் புகைப்படம்!

0
U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி - இந்திய அணிக்கு அறிவுரை வழங்கிய விராட் கோஹ்லி! வைரலாகும் புகைப்படம்!
U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி - இந்திய அணிக்கு அறிவுரை வழங்கிய விராட் கோஹ்லி! வைரலாகும் புகைப்படம்!
U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி – இந்திய அணிக்கு அறிவுரை வழங்கிய விராட் கோஹ்லி! வைரலாகும் புகைப்படம்!

2022 ஆண்டுக்கான ஜூனியர் உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் ஜனவரி 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி இந்திய U-19 வீரர்களுக்கு தனது அறிவுரைகளை தெரிவித்தார்.

U-19 WORLD CUP:

ஜனவரி 14ஆம் தேதி 2022 ஆண்டுக்கான ஜூனியர் உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 16 அணிகள் இடம் பெற்றுள்ளன. இத்தொடரில் இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. பிப்ரவரி 2 ஆம் தேதி ஆண்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் ஐசிசி யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய ஜூனியர் அணி ஆஸ்திரேலியா ஜூனியர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்று பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

பிப்.7ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை உத்தரவு!

பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற்ற மற்றோரு அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் மோதின. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டி மழையின் காரணமாய் 50 ஓவரில் இருந்து 47 ஓவர் ஆட்டமாக மாற்றப்பட்டது. இதில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு.முன்னேறியது. இந்தியா இங்கிலாந்து ஜூனியர் அணிகள் மோதும் ஜூனியர் உலக கோப்பை இறுதிப் போட்டி பிப்ரவரி 5 ஆம் தேதி ஆண்டிகுவாவில் உள்ள சார் விவியன் ரிச்சார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி இந்திய U-19 வீரர்களுக்கு தனது அறிவுரைகளை தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 14 வரை இரவு ஊரடங்கு மீண்டும் அமல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இந்திய U-19 ஆப் ஸ்பின்னர் கவுஷல் தம்பே, விராட் கோலியுடன் இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோவில் இறுதிப் போட்டி குறித்து உரையாடினார். அதில் கோஹ்லி இந்திய ஜூனியர் வீரர்களுக்கு தனது அறிவுறையை வழங்கினார். விராட் கோஹ்லியுடன் உரையாடல் முடிந்தவுடன் கவுஷல் தம்பே இறுதி போட்டி குறித்து பேட்டிங் கிங் தங்களுக்கு சில மதிப்புமிக்க உதவிக்குறிப்புகளை வழங்கினார் என்று கூறினார். மேலும் கோஹ்லியின் புகைப்படத்தையும் பகிர்ந்தார் . இதனை தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு முன்னதாக GOAT இன் சில மதிப்புமிக்க குறிப்புகளை கவுஷல் தம்பே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!