கோபியின் காதலி ராதிகா என்ற உண்மையை கூறும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பம் – இன்றைய எபிசோடு!

0

கோபியின் காதலி ராதிகா என்ற உண்மையை கூறும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பம் – இன்றைய எபிசோடு!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இதுவரை கோபி போட்ட அனைத்து நாடகங்களையும் பாக்கியா ஒன்று விடாமல் புட்டு புட்டு வைக்கிறார். பிறகு கோபியுடன் இதுவரை பழகியது ராதிகா தான் என்ற உண்மையை பாக்கியா கூற, வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியாகின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியல்

கடந்த ஒரு சில எபிசோடுகளாக அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இன்று பாக்கியா, கோபி பற்றிய உண்மைகளை சொல்ல ஆரம்பிக்கவும் எழில் தனக்கு தெரிந்த விஷயங்களை கூறுகிறார். இப்போது, அவரை இடைநிறுத்தும் பாக்கியா, கோபியை பார்த்து என்னை உங்களுக்கு பிடிக்காது என்று எனக்கு தெரியும். இதுவரைக்கும் என்னை எத்தனையோ முறை திட்டி இருக்கிறீர்கள், அலட்சியப்படுத்தினீர்கள், அவமானப்படுத்தினீர்கள். இதை எல்லாம் சகித்துக்கொண்டு எதற்கு இங்கு இருக்க வேண்டும் என்று நான் நினைத்தது உண்டு.

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும்? தேர்வாணையம் அறிவிப்பு!

ஆனால், இவர்கள் என் மேல் வைத்திருந்த பாசத்தினால் தான் நான் இங்கு இருந்தேன். ஒரு அம்மாவாக நான் என் கடமைகளை செய்திருக்கிறேன். எனக்குள் இருக்கும் கவலைகளை எல்லாம் மறைத்துக் கொண்டு நான் இங்கு இருக்கிறதற்கு இன்னொரு காரணம் நீங்கள் எங்கு சென்றாலும் வீட்டுக்கு திரும்ப வருவீர்கள் என்ற நினைப்பில் தான். ஆனால், கல்யாணம் ஆகி இத்தனை வருடங்கள் கழித்து நீங்கள் இன்னொரு பெண்ணை தேடிப் போவீர்கள் என்று நான் நினைக்கவில்லை. இதுவரை உங்களை விட்டுக்கொடுக்காமல் எத்தனையோ முறை செல்வியிடம் பேசி இருக்கிறேன்.

ஆனால், நேற்று ஹாஸ்பிட்டலில் உங்களை பார்த்ததும் என்னோட நம்பிக்கை சுக்குநூறாக உடைந்துவிட்டது என மனம் நொந்து பேசுகிறார். அப்போது நேற்று என்னதான் நடந்தது என்று ஈஸ்வரி கேட்க, யார் அந்த பெண் என்று கோபி தெரியாதது போல திரும்ப கேள்வி கேட்கிறார். அப்போது கோபப்படும் ராமமூர்த்தி, நேற்று வந்து வீட்டில் சத்தம் போட்டு போனவன் மனைவியுடன் தான் உன் மகன் பழகுகிறான். உன் மகன் ஒன்றும் ஒழுக்கமானவன் இல்லை என்று பேசுகிறார். ஆனால், இந்த உண்மையை ஏற்க மறுக்கும் ஈஸ்வரி, கோபி நீ அப்படி எல்லாம் இல்லை தானே என்று அவரிடம் கேள்வி கேட்கிறார்.

ஆனால், எதற்கும் அசைந்து கொடுக்காத கோபி, இவங்க என்ன சொல்ல வராங்க, எனக்கு ஒண்ணுமே புரியல என்று தனது நாடகத்தை ஆரம்பிக்கிறார். இதை கேட்டதும் கோபப்படும் பாக்கியா, எத்தனை முறை இப்படி பொய் சொல்வீர்கள். உங்களுக்கு வெட்கமே இல்லையா. எப்படி உங்களால் அப்படி நடித்து ஏமாற்ற முடிந்தது. இப்போது கூட நீங்கள் தவறு செய்திருக்க மாட்டீர்கள் என்று அத்தை நம்புகிறார்கள். இனியா கூட உங்கள் சந்தோசம் தான் முக்கியம் என்று எத்தனை முறை சொல்லி இருப்பாள். இவர்களை பார்த்து கூட உங்கள் நாடகத்தை நிறுத்தவில்லை என்று பேசுகிறார் பாக்கியா.

அப்போது, கோபி கூட யாரை பார்த்த பாக்கியா என்று ஈஸ்வரி கேட்க அதையெல்லாம் சொன்னால் அந்த அதிர்ச்சியை நீங்கள் எப்படி தாங்குவீர்கள் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறும் பாக்கியா மிரட்டும் தொனியில் நீங்க சொல்றீங்களா இல்ல நான் சொல்லவா என்று கோபியிடம் கேட்கிறார். தொடர்ந்து, அந்த உண்மை உனக்கும் தெரிஞ்சுடுச்சா என்று எழில் கூற அதையும் கோபி மறுத்து பேசுகிறார். இதனால் உச்சகட்டமாக கோபப்படும் பாக்கியா நான் பார்த்தது, இவர் மனைவி என்று சொன்னது, ஹாஸ்பிடலில் பில் கட்டியது எல்லாம் ராதிகா தான் என்று கூறுவது போல இன்றைய எபிசோடு வெளியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!